அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்திருக்கும் நவீன காலத்திலும் சில பல ஆச்சரியங்கள் எப்போதும் காத்திருக்கிறது. அண்மை அதிசயமாக, கருவுற்றிருந்த ஒரு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், ஏழு குழந்தைகள் கருவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், பிரசவத்தின்போது, பிறந்தது ஏழு அல்ல, ஒன்பது குழந்தைகள்! அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பல பரிசோதனைகளிலும் 7 குழந்தைகள் மட்டுமே கண்டறியப்பட்டன. இந்த அதிசய சம்பவம் நடைபெற்றது ஆஃப்ரிக்க நாடான மாலியில்... 


மொராக்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் (hospital) அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனபோது ஐந்து பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைளும் பிறந்தன. அவர்கள் அனைவரும் 'நன்றாக இருக்கிறார்கள்.


Also Read | ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்


ஸ்கேன்களில் தப்பிய இரண்டு குழந்தைகள் எவை என்பது மருத்துவர்களுக்கும் தெரியாது. கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு தான் கொடுத்திருக்கிறது.
 
25 வயதான ஹலிமா சிஸ்ஸே (Halima Cisse) என்ற பெண் தான் ஒன்பது குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றவர். மொராக்கோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சையில் 9 குழந்தைகளும் பிறந்தன. 


மேற்கு ஆஃபிரிக்க நாட்டின் தலைவர்களின் கவனத்தையும் இந்த தாயும் சேய்களும் ஈர்த்திருக்கின்றனர். சிஸ்ஸேவின் ஏழு குழந்தைகளும் பாதுகாப்பாக பிரசவிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிர்வாகம் மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 7க்கு பதில் ஒன்பது குழந்தைகள் பிறந்தன.  


Also Read | தானங்களும் அவற்றின் பலன்களும்; நமது சாஸ்திரங்கள் கூறுவது என்ன


'புதிதாகப் பிறந்த (ஐந்து பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள்) மற்றும் தாய் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்' என்று மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மொராக்கோ மற்றும் மாலி இரண்டிலும் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்டுகள் சிஸ்ஸே ஏழு குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பதைக் காட்டியது.


இதுபோன்ற கருதரிப்புகள் Nonuplets என்று அழைக்கப்படுபவை, மிகவும் அரிதானவை மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இதுபோல் ஒரே பிரசவத்தில் அதிக அளவில் பிறக்கும் சில குழந்தைகள் பெரும்பாலும் உயிர்வாழத் தவறிவிடுகின்றன என்பதால், இந்த ஒன்பது குழந்தைகளும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.  


ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR