எலோன் மஸ்க்கின் நியூராலிங்க், மனிதர்களுக்கு மூளைச் சில்லுகளைப் பொருத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பில்லியனர் எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையை இயந்திரங்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் எலக்ட்ரானிக் சிப்களை (Brain Chips) உருவாக்கி வருகிறது.


நியூராலிங்கின் முதல் மருத்துவ பரிசோதனைகள் மனிதர்கள் மீது (human patients) செய்யப்படும். பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மேத்யூ மெக்டௌகல் (Dr. Matthew MacDougall) கூறுகிறார்.


நரம்பு கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய உள்வைப்புகளை உருவாக்குவதில் நியூரோடெக்னாலஜி நிறுவனம் ஈடுபட்டுள்ளது, எதிர்காலத்தில், சூப்பர் இன்டெலிஜென்ட் கம்ப்யூட்டர்களுடன் (superintelligent computers) மனிதகுலத்தை இணைக்கும் சாத்தியக்கூறுகளையும் இந்த நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.


ALSO READ | பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்! 125 பாம்பு ஒண்ணா கடிச்சா என்னவாகும்?


தோராயமாக 23 மில்லிமீட்டர் (0.9 அங்குலம்) விட்டம் கொண்ட நியூராலிங்கின் சிப்பைப் பற்றி எலன் மஸ்க் இவ்வாறு கூறுகிறார்: "உங்கள் மண்டை ஓட்டில் சிறிய கம்பிகள் கொண்ட ஃபிட்பிட்" 


மூளை அலைகளைப் பயன்படுத்தி, பேசவும், தட்டச்சு செய்யவும் மற்றும் நகர்த்தவும் உதவுவதற்காக இந்த ஆராய்ச்சி உதவும். கடுமையான முதுகுத் தண்டு காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்த சாதனத்தை முதலில் பயன்படுத்தலாம் என நியூராலிங்க் விரும்புகிறது.


புதிய தொழில்நுட்பத்தின் உள்வைப்புகளைப் பெற்ற பிறகு, ஒரு குரங்கு எளிமையான வீடியோ கேம் விளையாடுவதைக் காட்டும் காட்சிகளை மூளை-சிப் ஸ்டார்ட்அப் ( brain-chip startup ) வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டது குறிப்பிட்டது..


கை மற்றும் கையின் அசைவுகளை ஒருங்கிணைக்கும் குரங்கின் மோட்டார் கார்டெக்ஸின் பகுதிகளில் பொருத்தப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மின்முனைகளைப் பயன்படுத்தி, மூளையில் இருந்து மின் சமிக்ஞைகளைப் பதிவுசெய்து டிகோட் செய்வதன் மூலம் நியூராலிங்க் செயல்படுகிறது என்று வீடியோவின் குரல்வழி கூறுகிறது.


ALSO READ | சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்


டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கோ (Tesla Inc, SpaceX, Boring Co) போன்ற நிறுவனங்கள் மூலம், கல்வி ஆய்வகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்க பல்வேறு நிபுணர்களை ஒன்றிணைத்ததவர் எலன் மஸ்க் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மூளையை நேரடியாக எலக்ட்ரானிக்ஸுடன் இணைப்பது என்பது புதிதான விஷயமல்ல. பார்கின்சன் நோய், கால்-கை வலிப்பு மற்றும் நாள்பட்ட வலி போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தூண்டுதலை வழங்குவதற்காக மருத்துவர்கள் மூளையில் மின்முனைகளை பொருத்துகின்றனர். 


சோதனைகளில், பொருத்தப்பட்ட சென்சார்கள் முடங்கியவர்களை கணினிகளை இயக்கவும் ரோபோ கைகளை நகர்த்தவும் மூளை சமிக்ஞைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது.


ALSO READ | கொரோனாவின் இறுதிச்சுற்று! மருத்துவ நிபுணரின் இனிப்பான செய்தி


ஆனால், இதையும் தாண்டியது தற்போதைய எலன் மஸ்க்கின் திட்டம். நியூராலிங்க் தற்போதுள்ள மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திட்டம் இது. 


மூளைக்கான செயற்கை நுண்ணறிவில் பல நிறுவனங்கள் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 


ALSO READ | பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான ‘5’ நாடுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR