மெஹா ஹிட் அவதார் 4-ம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கியது!!
இதோ அவதார் 4-ம் பாகத்தின் புதிய அப்டேட்!
ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். ஹாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனர் இவர். ஹாலிவுட்டில் மேக ஹிட் படங்கலான அவதார், டெர்மினேட்டர், டைட்டானிக், ஏலியன்ஸ் என பல ஹிட் படங்களை இயக்கியவர் இவர்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படங்கள் அனைத்தும் விருதுகளை தட்டிக்கொண்டே தான் போகும். இவர் இயக்கிய அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தில் உள்ள அனைத்து திரையுலகிலும் வெற்றிக்கொடியை நாட்டியது. இந்தியாவில் மட்டுமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலை அள்ளியது.
இதைத் தொடர்ந்து, அவதார் படத்தின் நான்காம் பாகத்திற்கான வேலைகள் நடை பெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அவதார் 4-ம் பாகத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர். இப்பட படப்பிடிப்பு Estonia-வில் உள்ள Navi Village என்ற இடத்தில் நடக்க இருக்கிறதாம்.
கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான அவதார் திரைப்படம் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கியது. பல்வேறு தொழில்நுட்பங்களும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், வி.எஃப்.எக்ஸ்-யை கொண்டு இப்படம் உருவானது.
இதையடுத்து, `அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் மார்ச் 31-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது....!
இப்படத்தின் படப்பிடிப்புக்காக உலகில் பல்வேறு நாடுகளைக் கருத்தில்கொண்டோம். அப்போது எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள நாடான எஸ்டோனியா என்ற இடத்துக்குச் சென்றேன். படப்பிடிப்பை அங்கு நடத்தினால் நன்றாக இருக்கும் எனப் படக் குழுவினரோடு சேர்ந்து முடிவெடுத்தேன்.
இந்நாட்டைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், எஸ்டோனியர்களின் கதைகளைக் கேட்கும்போது, அவர்களது கடவுள் இயற்கையில் இருப்பது தெரியவந்தது. அவதார் படத்தின் நாவி கதாபாத்திரத்தையும், எஸ்டோனியர்களையும் மையப்படுத்தி, நான்காம் பாகத்தில் எடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்'' என்று அவர் தெரிவித்தார்.
பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் "அவதார்-4" 2024-ல் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.