மனிதனின் கொடூர செயல்களின் உச்சமாக தெலுங்கானாவில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு குரங்கை தூக்கிட்டு கொன்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்கள்படி தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கம்மம் மாவட்டம் அம்மபாலம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, ஒரு விலங்குக்கு எதிரான கொடுமை குறித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


READ | உயிருக்கு போராடும் தனது குட்டியை காப்பாற்ற பரிதவிக்கும் தாய் குரங்கு!


மரத்தில் தூக்கிலிடப்பட்ட போது குரங்கு உயிருக்கு போராடுவதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த சம்பவத்தை கூடி பார்த்த உள்ளூர் மக்கள் ஆரவாரம் செய்வதையும் நாம் இந்த வீடியோவில் கேட்கலாம். மேலும் இந்த கொடூர சம்பவத்தை தடுக்க சில நாய் குட்டிகள் முயற்சிப்பதையும் நாம் இந்த வீடியோவில் பார்க்கலாம்.



கம்மம் மாவட்டத்தின் வெம்சூர் தொகுதியின் கீழ் உள்ள அம்மபாலம் கிராமத்தில் குரங்குகளின் படை அதிகளவில் நுழைந்ததை அடுத்து, மற்ற குரங்குகளை பயமுறுத்தும் விதமாக இந்த சம்பவத்தை ஊர்மக்கள் செய்துள்ளனர். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் குரங்கை அந்த பகுதிக்குள் நுழைந்த மற்ற குரங்குகளுக்கு "எச்சரிக்கை" விடுக்கும் விதமாக தூக்கிட்டு கொன்றுள்ளார்.


READ | மினி பைக்கில் வலம் வந்த குரங்கு குழந்தையை பறித்து சென்றதால் பரபரப்பு!


இந்த கொடூர சம்பத்தில் ஆர்வமாக ஈடுப்பட்டதற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுன் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.