இன்று பெரியாரின் 45-வது நினைவு தினம்: சமூக வலைதளத்தில் வைரலாகும் #periyar
இன்று இன்று பெரியாரின் 45-வது நினைவு தினம்.
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளரான தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் இன்று உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்த அவர், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார்.
இன்று அவரின் நினைவு தினம் என்பதால், அவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பெரியாரிய அமைப்புகள் மூலம் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேற்று கருஞ்சட்டைப் பேரணி திருச்சி மாவட்டத்தில் நடத்தினர். இன்று பெரியார் குறித்து நிறைய பதிவுகள் போடப்பட்டு சமூக வலைதளங்களில் பதவிட்டு வருகின்றனர்.
நேற்று சமூக வலைத்தளத்தில் #PeriyarRally என்ற ஹெஷ்டாக் வைரலானது. அதேபோல இன்று #periyar என்ற ஹெஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
உங்கள் பார்வைக்கு சில பதிவுகள்..........!!