மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீளம் பாம்பு; பதற வைக்கும் வைரல் வீடியோ
Snake Viral Video: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்ததால் பரபரப்பானது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு அதிர்ச்சியான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை நகரின் புறவழிச்சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த பரிசோதனை நிலையம் அருகே பாம்பு புகுந்ததால் மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பை இலாவகமாக இடுக்கி மூலம் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.