கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

Snake Viral Video: பாம்பு பெரும்பாலும், கீரிப்பிள்ளி, பருந்து, மயில் மற்றும் கழுகு ஆகியவற்றிடம் இருந்து ஒதுங்கியே இருக்க ஆசைப்படுகிறது. இவை பாம்பை பார்த்தவுடனேயே அதை தாக்கத் தொடங்குகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2022, 03:42 PM IST
  • பாம்பு மற்றும் கழுகு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோவில் கழுகு பாம்பை பிடித்து வேட்டையாடுவதை காண முடிகின்றது.
  • பாம்பின் முயற்சி வெற்றிபெற்று அது கழுகின் பிடியில் இருந்து தப்பித்ததா?
கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்பு மிகவும் ஆபத்தான உயிரினமாகக் கருதப்படுகிறது. அது ஒருவரை கடித்தால், அது உயிருக்கே ஆபத்தாக கருதப்படுகின்றது. இருப்பினும், பல உயிரினங்களை பார்த்து பாம்பு பயப்படுவது உண்டு. அவற்றை பார்த்தாலே பாம்பு பயந்து ஓடுவது உண்டு. 

மேலும் படிக்க | இவருக்கு வந்த சோதனைய பாருங்க: காண்டான கங்காரு, வைரலான வீடியோ 

பாம்பு பெரும்பாலும், கீரிப்பிள்ளி, பருந்து, மயில் மற்றும் கழுகு ஆகியவற்றிடம் இருந்து ஒதுங்கியே இருக்க ஆசைப்படுகிறது. இவை பாம்பை பார்த்தவுடனேயே அதை தாக்கத் தொடங்குகின்றன. 

பாம்பு மற்றும் கழுகுகள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கழுகு பாம்பை பிடித்து வேட்டையாடுவதையும், பாம்பு அதன் பிடியில் இருந்து வெளியேற முயற்சி செய்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. 

பாம்பை தாக்கிய கழுகு 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், காற்றில் பறக்கும் போது கழுகு ஒன்று பாம்பை பார்த்து விடுகிறது. உடனே கழுகு பாம்பின் அருகில் வந்து அதை பிடித்து விடுகிறது. கழுகின் நகங்களில் சிக்கி, பாம்பு மிகவும் கஷ்டப்படுகிறது. கழுகு தொடர்ந்து பாம்பை தாக்குகிறது. பாம்பு பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக தோன்றினாலும், அது கழுகின் நகங்களில் மோசமாக சிக்கிக்கொண்டுள்ளது வீடியோவில் தெரிகிறது. பாம்பால் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும் தெரிகிறது. 

கழுகிடம் சிக்கிய பாம்பின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @nature_okay

பாம்பால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை

பாம்பு கழுகிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்தும் தப்பிக்க முடியாமல் தவிப்பதை வீடியோவில் காண முடிகிறது. சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ nature_okay என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒருவர் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அவரையும் படுத்தி எடுக்க மற்றொருவர் இருப்பார் என்ற கருத்தை இந்த வீடியோ எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | தூங்குபவரின் மீது ஏறிய 2 மலைப்பாம்புகள் - அதிர்ச்சி வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News