5-வது முறையாக தேசிய விருதை பெற்ற தமிழக இசையமைப்பாளர்!
65-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார்!
65-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார்!
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ திரைப்படம் பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட வருதுகள் வரும் மே 3-ஆம் நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று வெளியிடை மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்கு இசையமைத்தற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5-வது முறையாக தேசிய விருதை ஏ.ஆர்.ரகுமான் பெறுகிறார்.