நாக்பூரில் உள்ள ஒரு டீக்கரைக்காரர் செம மாஸாகியிருக்கிறார். அவர் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு அடிமையாம். ரஜினியை பின்பற்றி சூப்பராக ஸ்டைல் காட்டுகிறார் டீக்கடைக்காரர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவை பார்த்த பிறகு டீக்கடைக் காரரின் ஸ்டைல் அனைவருக்கும் பிடித்துவிடும். பிறகு, மகாராஷ்டிராவின் நாக்பூருக்குச் சென்றால் புகழ்பெற்ற ‘டோலி கி தப்ரி’ டீக்கடைக்கு செல்லாமல் உங்களால் திரும்பி வரமுடியாது. 


அங்கு அருமையான சுவையில் வாய்க்கு ருசியாக தேநீர் கிடைக்கும். கண்ணுக்கு குளுமையாக அவருடைய ஸ்டைலான டீ ஆத்தும் திறமையையும் பார்க்கலாம். 



தேநீர் கடையின் உரிமையாளரான டோலி, தனது வாடிக்கையாளர்களுக்கு தேநீர் தயாரிக்கும் போது தனித்துவமான பாணியை பின்பற்றுகிறார். மாத்தி யோசிப்பவர்களுக்கு இன்று பிரபலமாகும் வாய்ப்புகளும் அதிகம் என்பதற்கு இவரே உதாரணம்.


டீயை ஆற்றும்போது, ஒரு கையை மிகவும் உயரத்திற்கு கொண்டு சென்று, தேநீரில் பாலை ஊற்றுகிறார், அதுவும் தெரிக்காமல் நல்ல வேகத்தில் ஊற்றுகிறார். 


Also Read | கிச்சு-கிச்சு மூட்டினால் சிரிக்கும் புலி, வைரலாகும் Tiger Laughing Video 


இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான டோலி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த ஸ்டாலில் தேநீர் பரிமாறிக் கொண்டிருக்கிறார், இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். டீக்கடைக் காரர்களை யாரும் சாதாரணமாக எடை போட்டு விடவேண்டாம்…


 டீ ஆத்தும்போது மட்டுமல்ல, பணத்தை வாங்கிக் கொண்டு சில்லறையைத் திருப்பித் தரும் போதும் ஸ்டைலை காட்டுகிறார்.  ஸ்டைலான தேநீர் கடை உரிமையாளர் காலை 6 மணிக்கு தனது கடையைத் திறந்து இரவு 9 மணிக்கு மூடுகிறார்.


Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு


வெறும் ஏழு ரூபாய்க்கு கிடைக்கும் இந்த தேநீரும், டீயை தயாரிப்பவர் போலவே மிகவும் பிரபலமானது.  ஏலக்காய் மணக்க தேநீர் கொடுக்கும் இவரின் கனவு நாயகன் நம்ம சூப்பர் ஸ்டார் தானாம்!


இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் என்றால், இவருக்கு சமூக ஊடகங்களில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவருக்கு பட்டப் பெயர் என்ன தெரியுமா? ‘Jack Sparrow of India’
 
‘Street Food Recipes’ என்ற பேஸ்புக் குழு, இந்த வீடியோவை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது, வீடியோ சூப்பர் வைரலாகிவிட்டது.


Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G