செய்தி நிருபர்களின் பணி அவ்வளவு எளிதானதல்ல, ஒவ்வொரு செய்தியிலும் ஒவ்வொரு நாளும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.  அவர்களுக்கு எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை அவர்கள் கேமரா முன் காட்டாமல் தங்களது பணியை செய்து முடிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள்.  அப்படி ஒரு நிருபரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் (Social Medai) வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | திருமணத்தில் தூங்கிப்போன மணமகள், டென்ஷன் ஆன மணமகன்: வைரல் வீடியோ


மேற்கு வர்ஜீனியாவிலுள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணிபுரியும் Tori Yorgey என்பவர் வழக்கம்போல லைவ் ரிப்போர்டிங்கில் செய்திகளை வழங்கி கொண்டு இருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பின்புறமாக வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது அந்த பெண் நிருபர் நிலைதடுமாறி சட்டென்று கீழே விழுந்துவிட்டார். 



காரில் மோதிய சில நொடிகளில் அந்த பெண் நிருபர் , “கடவுளே! என் மீது ஒரு கார் மோதிவிட்டது, ஆனால் நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினார். பின்னர்  "நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" என்று வேறு ஒரு பெண்ணின் குரல் கேட்டது, அநேகமாக அவர் அந்த காரின் டிரைவராக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு டோரி தான் நலமாக இருப்பதாக கூறினார். நீங்கள் கீழே விழுந்தீர்களா அல்லது உயரமாக தூக்கி வீசப்பட்டீர்களா என்று என்னால் எதுவும் கூறமுடியவில்லை, ஆனால் சிறிது நேரம் உங்களை திரையில் காணவில்லை அதை பார்த்தேன் என்று செய்தியாளர் டிம் கூறினார். 


 



அதற்கு பதிலளித்த tory, எனக்கும் எதுவும் தெரியவில்லை டிம்,  அந்த நிமிடம் என் முழு வாழ்க்கையும் என் கண்களுக்கு முன்பாக தெரிந்தது என்று கூறினார்.  இருப்பினும் tory விதத்திலும் கூட தனது பணியை தொடரும் வகையில் தனக்கு ஏற்பட்ட விபத்தையும் பொருட்படுத்தாது செய்தியை சேனலுக்கு வழங்கினார். பின்னர் tory ERக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் toryக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.  தற்போது இந்த வீடியோ 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையம், 28,000 லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.


ALSO READ | இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த இந்த வார டாப் 5 வைரல் வீடியோக்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR