சென்னை திரைப்பட கலைஞரின் உயிரை காக்க அவரது நண்பர் புது முயற்சி செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையை சேர்ந்த ஸ்டோரிபோர்டு கலைஞரான ராஜ்குமார் கே, கடந்த ஜனவரி 27, 2018 ஆம் நாள் பிற்பகல் விபத்துகுள்ளானார். இந்த விபத்தின் காரணமாக 30 வயதாகும் ராஜ்குமார் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து உடனடியாக அவர் MIOT சர்வதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உயிர் காப்பாற்றப்பட்டது, எனினும் அவர் இன்னும் அபாய கட்டத்தினை மீளவில்லை, இந்நிலையில் அவர் தற்போதும் ICU பிரிவில் வைத்து கண்கானிக்கப்பட்டு வருகின்றார்!


மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர் "இதுவரை குறிப்பிடத்தக்க நரம்பியல் மீட்டலைக் காட்டவில்லை மற்றும் ஹைபோக்ஸிக் இஸ்கெமிக்கல் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அடையளங்கள் தெரிகிறது என தெரிவித்துள்ளனர்.


தற்போது, ​​ராஜ்குமார் எவ்வளவு காலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது எவ்வளவு காலம் சிகிச்சை பெற வேண்டும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கூற இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.


எனினும் அவரது குடும்பத்தார் அவல் விரைவில் நலமாக திரும்புவார் என நம்புகின்றனர்.


ராஜ்குமாரின் ஒருநாள் மருத்துவ செலவீனத்திற்கு சுமார் 1 லட்சம் ரூபாய் தேவைப்படுதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். எனவே இச்செலவினை சமாளிக்க ஆன்லைன் மூலம் மக்களிடம் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிதி திரட்டும் பிரச்சாரத்தினை அவரது நண்பர் பி. சத்தியநந்தன் தொடங்கியுள்ளார்!


விபத்துக்குள்ளான ராஜ்குமார் சென்னையில் கிராஃபிக் டிசைனிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது அவரின் உயிரை காக்க அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.


அவருக்கு உதவ விரும்புவோர் கீழ்காணும் இணைப்பினை பயன்படுத்தி நித வழங்கி உதவலாம்...


https://milaap.org/fundraisers/helpraj?utm_source=whatsapp&utm_medium=fundraisers-title