டெல்லியில் மிருகக்காட்சிசாலையில் நிகழந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், சிங்கத்தின் அடைப்புக்குள் இளைஞர் ஒருவர் தவறுதலாக குதித்துவிட்டார். என்றபோதிலும், அதிர்ஷ்டவசமாக பாதுகாப்புப் படையினரால் அவர் மீட்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக கடந்த செப்டம்பர் 2014-ல், இதேப்போன்று ஒரு இளைஞர் புலியின் தடுப்புக்கள் தவறுதலாக குதித்த நிலையில் அவர், துரதிர்ஷ்ட வசமாக கொல்லப்பட்டார். புலி எல்லையின் தடுப்பு கட்டை குறைவாக இருந்ததால் இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தது. 


இந்நிலையில் தற்போது மீண்டும் இதுப்போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, தற்போது நடைப்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் பீகாரின் சாம்பாரனைச் சேர்ந்த 28 வயதான ரெஹான் கான் என அடையாளம் காணப்பட்டார். 



சிங்கத்தின் எல்லைப்பகுதியை மெட்டல் கிரில் கொண்டு மிருகக்காட்சி சாலை பாதுகாவலர்கள் அடைத்திருந்த நிலையில், எதிர்பாரா விதமாக சிங்கத்தின் அடைப்பில் ரெஹான் குதித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ANI செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அவர் சிங்கத்தின் அருகில் சென்று அதன் முன் அமர்ந்திருப்பதை நாம் காணலாம். மேலும் அதனுடன் அவர் ஒரு தீவிர விவாதம் நடத்தியது போலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து ரெஹானை காப்பாற்ற முற்பட்ட பாதுகாவலர்கள் அடைப்பிற்குள் ஏணியை கொடுத்து அவரை அழைத்ததாக தெரிகிறது. என்றபோதிலும், அவர் தான் அங்கு இறப்பதற்காக வந்ததாகவும், தன்னை இறப்பதற்கு அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் சிங்கத்தை சமாதானம் செய்த பாதுகாவலர்கள் ரெஹானை சிங்கத்திடம் இருந்து பத்திரமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட ரெஹான் மனநலம் பாதிக்கப்பட்டவராய் இருந்ததாகவும் தெரிகிறது.


தேசிய விலங்கியல் பூங்கா என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் டெல்லி உயிரியல் பூங்கா தேசிய தலைநகரில் பழைய கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி வருகிறது.