மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தெரியும், அவற்றிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என. இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவற்றின் ஒரு காலை நம்மீது வைத்தாலே எழும்புகள் எல்லாம் உடைந்துவிடும். அந்தளவுக்கு மாடு மற்றும் காளைகளின் எழும்புகள் பலமாக இருக்கும். அதுவம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்காக காளைகளை வளர்ப்பவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால், உயிர் போகும் ஆபத்துகூட இருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் காளைகள் நம்மை தூக்கி பந்தாடிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்! 


மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கூட பார்த்திருக்க வாய்ப்புகள் உள்ளது. சீறிப் பாய்ந்து செல்லும் காளைகள், தங்களை அடக்க வருபவர்களை தூக்கி பறக்கவிடும். இதில் படுகாயமடைந்தவர்களும் இருக்கிறார்கள். உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உள்ளனர். காளைகளை அடக்குதல் என்பது அவற்றின் திமிழை பிடித்து கொஞ்ச நேரம் மட்டுமே இருக்க முடியுமே தவிர, முழுவதுமாக எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியோமோ, அதற்குள் காளைகளிடம் இருந்து நகர்ந்து சென்றுவிடுவது நல்லது. இல்லையென்றால் அவற்றின் பொறுமை மீறி நம்மை விளாசித் தள்ளிவிடும்.



ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு இது நன்றாகவே தெரியும். தெரியாமல் இருப்பவர்கள் தான் இதனை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் காளைகளை கொண்டு விளையாடும் இத்தகைய விளையாட்டுகள் இருக்கின்றன. ஆனால், அவை வேறுவடிவத்தில் அங்கு விளையாடப்படுகின்றன. அப்படி வெளிநாடு ஒன்றில் காளையை துரத்தும்போது, முன்னாள் சென்ற காளை, தன்னுடைய பின்னங்காலில் உதைத்தில், ஒரு நபர் பறந்து சென்று விழுகிறார். பார்க்கும்போதே இந்தக் காட்சி பதைபதைக்க வைக்கிறது. இருப்பினும் அந்த நபர் விழுந்து எழுந்து இயல்பாக செல்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.  


மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ