ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் கடந்த இரண்டு வாரங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், 3 மாநிலங்களிலும் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 300 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தோவலேஸ்வரம் அணையில் இருந்து மட்டும் சுமார் 19.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சரக்கடித்த சேவல், கம்பனி கொடுத்த கோழி: வைரல் வீடியோ



வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. ஆந்திராவில் மட்டும் சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். கனமழைக்கு மட்டும் இதுவரை ஆந்திராவில் 24-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். 



இதனிடையே, நண்டியாலா மாவட்டத்தில் வெள்ள நீரில் நூற்றுக்கணக்கான மாடுகள் அடித்து வரப்பட்டன. இந்த மாடுகள் கரை சேர முடியாமல் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த மீனவர் ஒருவர் உடனடியாக பரிசலில் புறப்பட்டு, அவை கரைசேர வழிகாட்டினார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாடுகள் உயிர் பிழைத்தன. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பலரும் மீனவரின் மனிதாபிமான முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | சினிமாவை மிஞ்சும் சீன், இணையத்தை இளக வைத்த அண்ணன் தங்கை பாசம்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ