குரங்குகளுக்குள் நடந்த கேங் வார் - வைரல் வீடியோ
குரங்குகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதை அனைவரும் அறிவோம். அதனால்தான் என்னவோ மனித மனம் ஒரு குரங்கு போன்ற வாசகங்கள் எப்போது நம் புழக்கத்திலேயே இருப்பவை.
அதேபோல் குரங்குகளின் செயல்களும் அப்படியே மனிதர்களை ஒத்திருக்கக்கூடியவை. அதன் ஒவ்வொரு செயல்பாடும் அப்படியே மனிதர்களை பிரதி எடுத்தது போலவே இருக்கும்.
மேலும் படிக்க | Jog Falls: இது இந்தியாவின் நயாகரா; மனம் மயக்கும் அருவியின் வைரல் வீடியோ
ஒரு மனிதன் எப்படி தனது குழந்தையை பார்த்துக்கொள்வானோ அதேபோலவும், ஒரு மனிதனின் உணவு பழக்கமும், உண்ணும் முறையும் எப்படி இருக்குமோ அதேபோலவும் குரங்குகளுக்கும் இருக்கும்.
இதனால் குரங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எப்போது நெருங்கிய தொடர்பு இருப்பவை. அதுமட்டுமின்றி மனிதர்களுக்கு அதிகம் தொல்லை தருவதும் குரங்குகள்தான்.
இந்நிலையில் குரங்குகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஏராளமான குரங்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கின்றன. தொடர்ந்து சத்தமிட்டப்படி தங்களுக்குள் அடித்துக்கொள்கின்றன. ஆனால் இந்தச் சம்பவம் எந்தப் பகுதியில் நடந்தது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
மேலும் படிக்க | என்னை அனுப்பாதீங்க... தோளில் சாய்ந்து அழும் ஆடு; கண் கலங்க வைக்கும் வீடியோ
இதனைப் பார்க்கும்போது அப்படியே மனிதர்களுக்குள் நடக்கும் கேங் வார் போன்றே இருக்கிறது. மேலும் அந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துவருவதால் அது தற்போது வைரலாகிவருகிறது.
மேலும் படிக்க | Temjen Imna Along: சிறிய கண்களுக்கு எத்தனை பவர்? நன்மைகளை பட்டியலிடும் பாஜக அமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ