கொடூர புலியை கட்டியிழத்து கெத்து காட்டும் சிறுவன்! வைரல் வீடியோ..
Viral Video Of Tiger: புலி ஒன்றினை ஒரு சிறுவன் சங்கிலியால் கட்டி அதனுடன் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல்வேறு ஜீவராசிகள் மற்றும் பல நாடுகள், கண்டங்களை கொண்டு மிகப்பெரிய அண்டமாக இருக்கிறது, இந்த உலகம். உலகம் எவ்வளவு பெரியது என்றாலும் நம் கையில் உள்ள சிறிய கைப்பேசி அதை நம் கைக்குள் சுருக்கி விட்டது. இதை தவிர, நாம் அனைவரும் உபயோகிக்கும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது. இவற்றின் வாயிலாக பல சமயங்களில் அதிர்ச்சிகரமான விஷயங்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் நம்மால் அறிந்து காெள்ள முடிகிறது. அப்படி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது. காட்டில் வாழும் வேட்டை விலங்குகளை பார்த்தால் நமது ஈரக்கொலையே நடுங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஒரு சிலர் அப்படி மனிதர்களையே விழுங்கி விடும் காட்டு விலங்குகளுக்கே ஆட்டம் காட்டுகின்றனர். அவற்றிற்கு டிரைனிங் கொடுத்து தான் சொல்லும் பேச்சை கேட்க வைக்கின்றனர். அப்படி, ஒரு கொடூர புலியை தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு சிறுவனின் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
பயமில்லாமல் புலியை கையாளும் சிறுவன்..
நம் ஊரில் ஒரு பழமொழி உள்ளது. “இளம் கன்று பயமறியாது..” என்பதுதான் அந்த பழமொழி. சிறு பிள்ளைகள் பலர் பயமில்லாமல் செய்யும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதை விட ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், வளர்ந்த பலருக்கு கூட இவர்கள் செய்யும் செயல்களை நினைத்து பார்க்க கூட துணிச்சல் வராது. அந்த அளவிற்கு தைரியமான சில செயல்களில் சமயங்களில் குழந்தைகள் ஈடுபடுவர். அப்படி, ஒரு சிறுவன் கொடூர புலியை சங்கிலியால் கட்டி அதை தன் கையில் வைத்து வாக்கிங் கூட்டிக்கொண்டு பாேகும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | முட்டை பொரி சாப்பிடுபவர்கள் உடனே இந்த வீடியோவை பாருங்கள்.. அதிர்ச்சி தரலாம்
வைரல் வீடியோ:
இந்த வீடியோ ஆரம்பிக்கையிலேயே இதை பார்ப்பவர்களுக்கு தூக்கி வாரிப்போடுகிறது. 4-5 வயது மட்டுமே நிரம்பிய அந்த சிருவன், நன்கு வளர்ந்த கொடூர புலியுடன் இருப்பது போல அந்த வீடியோ ஆரம்பிக்கிறது. அந்த புலியின் கழுத்து இரும்பு சங்கிலி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த சங்கிலியின் கடைசி முனை அந்த சிறுவனிடம் உள்ளது. புலிக்கு அருகிலேயே நடக்கும் அந்த சிறுவன், கேமராவை பார்த்ததும் தன் சிகையை ஸ்டைலாக சரி செய்கிறான்,
நெட்டிசன்களின் கருத்து:
குழந்தைகளை வைத்து இது போல சாகசம் புரிகிறேன் என்ற பெயரில் இருக்கும் வீடியோக்களை பெரும்பாலான மக்கள் வரவேற்பதில்லை. இதை பதிவிடுபவர்கள், ஒரு சிலருக்கு இந்த வீடியோ பிடித்திருக்கிறது என்பதற்காக இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர். அது போல, இந்த வீடியோவை பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கையும் பல நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். ஒரு சிலர், அந்த சிறுவன் செய்யும் செயலையும் அந்த வீடியோ எடுப்பவரையும் “இது முட்டாள் தனமான செயல்..” என்று கூறி வருகின்றனர். ஒரு சிலர், அந்த குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டு கமெண்ட் அடித்து உள்ளனர். இன்னும் சிலர், காட்டு விலங்குகள் காட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் அவற்றை இவ்வாறு அடைத்து துன்புருத்துவது நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர். இது போன்ற கொடூர விலங்குகளின் செயல்கள் நொடிக்கு நொடி மாறும் என்றும் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் எனும் நிலையில் இவ்வாறான செயல்கள் நல்லதற்கல்ல என்றும் சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | மடி மீது முதலை..கழுத்தில் பாம்பு..ஆபத்துடன் விளையாடும் சிறுவன்! வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ