பிரபல எழுத்தாளர் மாதவிகுட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு மன்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் "ஆமி" ட்ரைலர் வெளியானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் கமால் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிக்க முதலில் வித்யாபாலன் தான் இயக்குனரால் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக மஞ்சு வாரியர் முதன்மை கதாப்பாத்திரத்தினை ஏற்றுள்ளார்.


இப்படத்தினை குறித்து பல விசயங்களை இந்த ட்ரைலர் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது. சமுதாயத்தில் காணப்படும் பல விசித்திர பழக்கவழக்கங்களை தனது புரட்சிகரமான எழுத்தால் பல நேரங்களில் வெளிக்காட்டியவர் எழுத்தாளர் மாதவ்குட்டி. அவரின் அடையாளமான முக்குத்தி மற்றும் கண்ணாடியுடனே இப்படத்தில் மஞ்சு வாரியர் அனைத்து காட்சியிளம் தென்படுகின்றார்.


அவரின் கதையான "என்டே கதா (என் கதை)" - யின் பெயரை உச்சரித்தே ட்ரைலர் துவங்குகிறது. மேலும் இந்த ட்ரைலரில் மாதவிகுட்டியின் குழந்தைப்பருவ காட்சிகள் இருப்பதால் அவரின் வாழ்க்கை வரலாறாகவே இப்படம் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது!