சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன.  அதிலும் காட்டு வாழ்க்கையை காட்டும் வீடீயோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அந்த வகையில் யானை கூட்டம் ஒன்று வாக்கிங் போகும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குடும்பத்துடம் வாக்கிங் போகும் யானைகள் நடையழகை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யானைகள் அதிலும், குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், யானைகள் குடும்பத்துடன் வாக்கிங் போவதை பார்த்தால் மயங்காதவர் இருக்க முடியாது. மாடலிங் அழகிகள் இந்த யானைகளீ பயீற்சி பெற வேண்டும். அவ்வளவு அழகாக இருக்கிறது அதன் நடையழகு...யானைகளின் வீடியோவை பார்க்கும்போது எப்போதும் அழகாக இருக்கும். இணையத்தில் யானைகளின் சுட்டி வீடியோக்களும் அதிகம் கொட்டிக்கின்றன. 


யானையின் நடையழகை காட்டும் வைரல் வீடியோ:


 



 


இந்த வீடியோ டிவிட்டரில் உள்ள Buitengebieden என்ற பெயரில் உள்ள  @buitengebieden  என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல், அழகாக நடை பயிலும் யானை குடும்பத்தை பலர் பாரட்டியுள்ளார். இந்த வீடியோவுக்கு இதுவரை  ஆயிரக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒவ்வொரு விலங்குக்கும் இருக்கும் புத்திசாலித்தனத்தைப் போல, யானைக்கு என்று சில பிரத்யேக குணங்கள் இருக்கின்றன. ஞாபக சக்தி அதிகம் உள்ள உயிரினம் யானை. தங்கள் வாழ்விடங்களில் மனித குடியிருப்புகள் வந்தாலும், பழைய இடம்பெயர்ந்த பாதைகளை நினைவில் வைத்துக் கொள்ள அதன் திறன் உதவுகிறது. 


முதலில் இரண்டு யானைகள் நடந்து செல்வதை காணலாம், குட்டியானையுடன் துணையாக தாய் யானையும் நடந்து செல்கிறது. அபோது, யானைகள் சில ஒவ்வொன்றாக அதனுடன் இணைந்து நடக்க ஆரம்பிக்கின்றன. பொதுவாக யானைகள் கூட்டமாக செல்லும் இயல்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சுறா மீனை சுமந்து செல்லும் கடல் பருந்து... இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!


விலங்குகள் உலகம் அனுமானிக்க முடியாத விஷயங்கள் நடக்கும் ஒரு தனி உலகம். அங்கே வல்லவன் வாழ்வான் என்ற விதி சரியாக பொருந்தும். வலிமை நிறைந்த விலங்குகள், பலவீனமான விலங்குகளை தனக்கு இணையாக ஆக்கிக் கொள்கின்றன. ஆனால் அதே சமயம் சில சமயங்களில், தனது சாதுரியமான செயல்கள் மூலம் வலிமையான விலங்குகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளும் எளிய விலங்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ