சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன. குறிப்பாக பாம்பு யானை குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.யானைகள் குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை.
அதிலும், குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். யானை ஒருபோதும் பாதைகளை மறக்காது. ஞாபக சக்தி அதிகம் உள்ள உயிரினம் யானை. தங்கள் வாழ்விடங்களில் மனித குடியிருப்புகள் வந்தாலும், பழைய இடம்பெயர்ந்த பாதைகளை நினைவில் வைத்துக் கொள்ள அதன் திறன் உதவுகிறது. சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், குவஹாத்தியில் நிலைகொண்டிருந்த ஜவான்கள் சந்தித்த யானையின் அற்புதமான அறிவுத் திறனைக் காணலாம்.
யானையில் சாதுர்யத்தை காட்டும் வைரல் வீடியோ:
An elephant eats his favorite jackfruit at Narengi Army Camp in Guwahati. He has done no harm to anyone. pic.twitter.com/S7c7uEejkW
— Nandan Pratim Sharma Bordoloi (@NANDANPRATIM) June 5, 2023
சமீபத்தில் நரேங்கி ராணுவ முகாமுக்கு - பலாப்பழம் சாப்பிடுவதற்காக ஒரு யானை எதிர்பாராதவிதமாக வருகை தந்தபோது, யானையின் சாதுர்யமான நடத்தையை வெளிப்பட்டது. யானை தனது பசியை ஆற்றிக் கொள்ள பலா மரம் இருக்கும் இருப்பிடத்தை தேடி வருகிறது. அப்போது, மரத்தை சாய்க்காமல், பாலப் பழம் கீழே விழும் வரை மரத்தை லாவகமாக அசைப்பதை வைரல் வீடியோவில் காணலாம். மனிதர்களாகிய நாம் காடுகளையும் ஆக்கிரமித்து வருவதால், யானைகள் மட்டுமல்ல பல வகை விலங்குகளும் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாம் துன்புறுத்தவில்லை என்றால், பொதுவாக யானை எந்த விதமான தாக்குதலையும் நடத்துவதில்லை.
இந்த வீடியோ டிவிட்டரில் உள்ள Nandan Pratim Sharma Bordoloi என்பவரின்@NANDANPRATIM என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல், மரத்தையும் கீழே சாய்க்காமல் லாவகமாக பலாபழத்தை எடுத்த யானையை பாரட்டியுள்ளார். இந்த வீடியோவுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ