நடிகை ஷகிலா உயிரிழந்துவிட்டாரா; வெளியான அதிர்ச்சி வீடியோ
பிசியாக நடித்து வரும் ஷகிலாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து பிரபலமானார்.
நடிகை ஷகிலா (Shakeela) தமிழில் தூள், வாத்தியார், ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் மற்றும் ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ALSO READ | பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பட்டியல் இதோ!
இதற்கிடையில் தற்போது நடிகை ஷகிலா இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் பரப்பியுள்ளனர். இது பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்நிலையில் ஷகிலா தான் நலமுடன் இருப்பதாக காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பொய்யான செய்தியைப் பரப்பியவருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் அதில்.,
தான் இறந்துவிட்டதாகச் வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. நான் தற்போது மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் என்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் ஏராளமானோர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி. கேரள மாநில மக்கள் என்னிடம் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி.
யாரோ ஒருவர் ஒரு கெட்ட செய்தியைப் பரப்பியிருக்கிறார். அதனால் எனக்கு நிறைய அழைப்புகளும், அன்பும் கிடைத்திருக்கின்றன. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி என்றார். தற்போது ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ALSO READ | பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் பங்கேறப்பு- உறுதிசெய்த போட்டோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR