பிரபல இந்திய நடிகை சன்னி லியோன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி பாலிவுட்டில் தற்போது முக்கிய நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.


தமிழில் அவரது நடிப்பில் வீராமாதேவி திரைப்படம் பிரம்மாண்ட செலவில் உறுவாகி வரும் அதே வேலையில் மலையாளத்தில் ரங்கீலா என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.  



மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த மதுர ராஜா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடி இருப்பதாக தகவல்கள் வெளியான. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


சன்னிலியோன் பாடலுக்கு கேரள ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் விசலடித்தும், நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.  


இந்நிலையில் தற்போது கேரள ரசிகர்களின் உற்சாகத்தை வரவேற்கும் விதமாக சன்னி லியோன் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மம்முட்டி உடன் சேர்ந்து எடுத்த கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  


மம்முட்டி சார் அவர்களுக்கும், பெரும் வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டு இந்த பதிவினை அவர் பதிவிட்டுள்ளார்.