கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் சங்கர் இயக்கத்திதல் நடிகர் ரஜினிகாந்து நடித்து வெளிவார காத்திருக்கும் திரைப்படம் 2.0. இப்படத்தினை அடத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். 


இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். முதன்முறையாக இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான காலா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், அடுத்ததாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.



இதற்கு முன்னதாக படக்குழுவினர் அறிவித்ததன் படி இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுத்தீன் சித்திக், நடிகை சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை திரிஷா-வும் இணைந்துள்ளார் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.