Always Bride: 11 திருமணங்களுக்குப் பிறகு மீண்டும் கல்யாணத்துக்கு தயாராகும் 52 வயது பெண்
கல்யாணம் செய்துக் கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று 12வது திருமணத்திற்கு மாப்பிள்ளையைத் தேடுகிறார் 52 வயது பெண்.
கல்யாணம் செய்துக் கொண்டவர்கள், அதை கொடுமை என்று புலம்பும் நிலையில், 11 திருமணங்களுக்குப் பிறகு, மீண்டும் மாப்பிள்ளைத் தேடும் பெண்ணைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்?
திருமணம் என்பது ஒரு பந்தமா சொந்தமா என்ற விவாதங்கள் ஒருபுறம் என்றால், அது என்ன கொடுமையாக இருந்தாலும் சரி, எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று 12வது திருமணத்திற்கு மாப்பிள்ளையைத் தேடுகிறார் இந்த 52 வயது பெண்.
இந்தப்பெண்ணின் முதல் திருமணம், உயர்நிலைப் பள்ளி கல்வி முடிந்தவுடன் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை 11 வெவ்வேறு நபர்களை திருமணம் (Bizarre Wedding) செய்து சாதனை படைத்துள்ளார் இந்த பெண். இந்தியாவில் திருமணம் செய்துக் கொள்வது என்பது மிகப் பெரிய முடிவாகக் கருதப்படுகிறது. ஆனால், இது அமெரிக்கப் பெண்ணின் திருமண விருப்பக் கதை. இந்தப் பெண் இதுவரை ஒன்பது வெவ்வேறு ஆண்களை மணந்துள்ளார்
அமெரிக்காவில் வசிக்கும் மோனெட் (Monette), என்ற பெண், சிறு வயதிலேயே ஆண்களுக்கு அடிமையானவர் என 'மிரர் யுகே' செய்தி வெளியிட்டுள்ளது. தனக்கு திருமணம் செய்துக் கொள்வது மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் மோனெட், சிறு வயதில், தனது சகோதரனின் நண்பர்களை மிகவும் விரும்பியதாகவும், அவர்களை திருமணம் செய்து கொள்வதை கற்பனை செய்து பார்த்ததாகவும் கூறுகிறார்.
உயர்நிலைப் பள்ளி முடிந்தவுடன் மோனெட் தனது முதல் திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் இன்று வரை 11 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமணங்கள் எதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தற்போது, மோனெட் தனது 12 வது திருமணத்தை மேற்கொள்ள ஒரு துணையைத் தேடுகிறார்.
Also Read | செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!
இதுவரை 28 பேர் திருமணத்திற்கு முன்மொழிந்துள்ளனர்
தற்போது மோனட்டின் வயது 52. டிஎல்சி செய்தி சேனலுடனான உரையாடலில் மோனெட் கூறுகையில், இன்றுவரை 28 பேரிடம் இருந்து திருமண முன்மொழிவுகள் வந்துள்ளன. இதைவிட அதிகமானவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.
அடிக்கடி திருமண முறிவு ஏற்படுவதால் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என்று சொல்லும் மோனெட் தற்போது 57 வயதான ஜானுடன் (John) டேட்டிங் செய்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜானை காதலித்து வரும் மோனெட், ஜானை இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு அவரிடம் இருந்து பிரிந்துவிட்டார் என்பதும் ஆச்சரியமான செய்தி.
பிரிவோம், இணைவோம் என்று நினைக்கும் மோனெட்டை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் ஜான். மோனெட்டின் கல்யாணத்தின் மீதான மோகம் பற்றி பேசும் அவரது முன்னாள் மற்றும் எதிர்காலக் கணவர் ஜான், நாங்கள் இருவரும் ஆன்லைனில் சந்தித்தோம். இரண்டு முறை பிரிந்த பிறகும், மோனெட் என்னைக் காதலிக்கிறார், 12ஆம் முறையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்..
மோனெட்டுக்கு பிடித்த கணவர் யார்?
தனது முன்னாள் கணவர்களைப் பற்றி பேசும் மோனெட், தனது ஐந்தாவது கணவர் அனைவரிலும் சிறந்தவர் என்று கூறுகிறார். அதேசமயம் ஆறாவது கணவர் மிகவும் நல்ல குணம் கொண்டவர். இதனால் அவளை இரண்டு முறை திருமணம் (Two Times Married the same person) செய்து கொண்டதாகவும், ஆன்லைனில் எட்டாவது கணவரை கண்டுபிடித்ததாகவும் சொல்கிறார். தனது பத்தாவது கணவர், பள்ளித் தோழர் என்று சொல்கிறார் இந்த நித்ய கல்யாணி.
READ ALSO | 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR