அக்ஷராஹாசன் புகைப்படம் லீக்: மும்பை போலீசில் புகார்....
அக்ஷராஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கானதால் மும்பை போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்...!
அக்ஷராஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கானதால் மும்பை போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்...!
நடிகை அக்ஷராஹாசன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அக்ஷராஹாசன் விகரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலைய்ல், இந்த சம்பவம் குறித்து அக்ஷராஹாசன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருப்பதாகவும், இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.