மும்பையில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழும் பெண் பயணியை ரயில்வே காவலர் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் உள்ள கஞ்சுமார்க் பகுதியில் புறநகர் மின்சார ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதியாக உள்ளது. 


இந்நிலையில், காலையில் புறப்பட்ட ரயிலில் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பிளட் பாரத்தில் விழுந்துள்ளார். இதை கண்ட பாதுகாப்பு அதிகாரி இவரை காப்பற்றுவதற்கு அவரை பிடித்து இழுத்துள்ளார். அவரின் முயற்சி பயனளிக்கவில்லை. காவல்துறை அதிகாரி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சக பயணிகள் அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 



இதையடுத்து, அந்த பெண்ணுக்கு முதலுதவியளிக்கபட்டு. சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவரின் உயிரை காப்பாற்றிய ஆர்.பீ.எஃப் கான்ஸ்டபிள் ராஜ் கமல் யாதவ்-க்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.