இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


மேலும் படிக்க | உயிரை பணயம் வைத்து ஒரு போட்டோஷூட்: கடுப்பாகி கமெண்ட் செய்த நெட்டிசன்ஸ்.... வைரல் வீடியோ


கிடுகிடுக்க வைக்கும் சம்பவம் வெளியானது


அந்தவகையில் சமீபத்திலும் ஒரு விஷப்பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இந்த சம்பவம் பெல்காமில் உள்ள ஹல்கா கிராமத்தில் நடந்துள்ளது. இங்கு ஒரு சிறுமி பாம்பின் பிடியில் இருந்து தப்பினார். சிறுமி வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கொண்டிருந்த போது சுவரில் ஓரத்தில் யாருடைய கண்ணிலும் படாமல் விஷப்பாம்பு ஊர்ந்து செல்கிறது. அதிர்ஷ்டவசமாக விஷப்பாம்பு அந்த குழந்தையை தாக்கவில்லை. அப்போது பாம்பைக் கண்ட சிறுமி அலறியடித்துக்கொண்டு அறைக்குள் ஓடினாள். பின்னர் வீட்டிற்குள் வந்த பாம்பை பின்வாங்கி அங்கிருந்து சென்று விடுகிறது.


சிறுமி மற்றும் பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்து வருகிறது. மேலும் இந்த வைரலான வீடியோவை பல லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 


மேலும் படிக்க | இந்த பாம்புக்கு சொகுச பாத்திங்களா.. பார் மேனஜர் அலறல்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ