உயிரை பணயம் வைத்து ஒரு போட்டோஷூட்: கடுப்பாகி கமெண்ட் செய்த நெட்டிசன்ஸ்.... வைரல் வீடியோ

Scary Viral Video: பார்த்தால் பீதியை கிளப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2023, 01:16 PM IST
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ @Fiensport என்ற கணக்கிலிருந்து ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
  • செய்தி எழுதப்படும் வரை 8 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.
உயிரை பணயம் வைத்து ஒரு போட்டோஷூட்: கடுப்பாகி கமெண்ட் செய்த நெட்டிசன்ஸ்.... வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இந்த வீடியோக்களில் சிலவற்றை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். சில வீடியோக்கள் முற்றிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன. இவற்றை இணையவாசிகள் மீண்டும் மீண்டும் லூப்பில் காண்கிறார்கள். இவற்றில் சில வீடியோக்கள் நம்மை அதிக அளவில் அச்சுறுத்தும் வகையிலும், அதே சமயம் பாடம் புகட்டும் வகையிலும் இருப்பதுண்டு. 

சில வீடியோக்களால் நாம் பீதியில் பயப்படத் தொடங்குகிறோம். பார்க்கும் நமக்கே உடல் வெலவெலத்துப்போகிறது. சமீப காலங்களில், பல வித வினோத செயல்களின் வீடியோக்களை நாம் இணையத்தில் அதிகமாகப் பார்க்கிறோம். இப்படி எல்லாம் எதற்கு செய்ய வேண்டும் என இவற்றை பார்த்தால் நமக்குத் தோன்றுகிறது. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்த்தால் நம்மால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

வைரல் ஆகிவரும் இந்த வீடியோவில், ஒரு பெண், ஒரு பெரிய, கொடூரமான புலியுடன் விளையாடிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. பொதுவாக பழைய காலங்களில் சிங்கம் முதல் புலி, சிறுத்தை, சிறுத்தை போன்ற விலங்குகளை சிலர் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த வீடியோவை பார்த்தால், அந்த புலி அந்த பெண்ணால் வளர்க்கப்படுவது போல தோன்றுகின்றது. இருப்பினும், புலி போன்ற மிருகங்கள் வளர்க்கப்பட்டாலும், அவை எப்போது மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் என சொல்வதற்கில்லை. அவை பெரும்பாலும் மனிதர்களை தாக்க அதிகம் தயக்கம் காட்டுவதில்லை. 

மேலும் படிக்க | முதலையை கத்தியால் குத்தபோய் கையை இழந்த நபர்: பெரிய அப்பாடக்கரா இருந்தா மட்டும் இந்த வைரல் வீடியோவ பாருங்க

அப்படிப்பட்ட நிலையில், அவற்றுடன் விளையாடுவது ஆபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போன்றத்தான். இந்த வீடியோவில் காணப்படும் பெண்ணும் தனது அசாத்திய துணிச்சலால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இப்படிப்பட்ட ஆபத்தான விலங்குகளுடன் விளையாடும்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இதன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடக்கூடும். புலியுடன் விபரீத விளையாட்டை விளையாடிய பெண்ணின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. 

பயங்கரமான புலியுடன் போட்டோஷூட்

இந்த வீடியோவில், பெண் ஒருவர் புல் தரையில் படுத்திருப்பதை காண முடிந்தது. அதனுடன் ஒரு பயங்கரமான புலி அந்த பெண்ணின் மேல் வசதியாக அமர்ந்திருப்பதையும் காண்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், யாராக இருந்தாலும், தனது உயிரை காத்துக்கொண்டு ஓடவே முயற்சிப்பார்கள். ஆனால், அந்த பெண்ணோ மிக வசதியாக படுத்துக்கொண்டு, புகைப்படம் எடுத்துக்கொள்ள தயாராகிறார். இது காண்பார்களை வியப்பில் ஆழ்த்துவதோடு, அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது. 

வீடியோவைப் பார்த்த பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ @Fiensport என்ற கணக்கிலிருந்து ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. செய்தி எழுதப்படும் வரை 8 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

பெரும்பாலான கமெண்டுகளில் கோவமே மேலோங்கி இருக்கின்றது. அந்த கோவத்திலும் அந்த பெண் மீது அவர்கள் காட்டும் அக்கறைதான் தெரிகிறது. ‘இந்த துணிச்சல் ஆபத்தானது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இப்படிப்பட்ட ஃபோட்டோ ஷூட்கள் தேவையா’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | மதிய லஞ்சே சாப்பிட்டச்சி டா.. இன்னுமா டிராபிக் நகரல? ஷாக்கிங் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News