Twitter-ல் trend ஆகிறது #BoycottAmazon: காரணம் என்ன தெரியுமா….
அமேசான் இப்படிப்பட்ட சர்ச்சையில் மாட்டிக்கொள்வது இது முதன்முறையல்ல. அண்மையில், விநாயகர் படத்துடனும், இந்திய பேனருடனும் பாய்கள் மற்றும் மிதியடிகளை விற்றதற்காக நெட்டிசன்கள் அமேசான் மீது எரிச்சலடைந்தனர்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தனது இணையதளத்தில் 'ஓம்' அச்சிடப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்ததற்காக ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) மீது நெட்டிசன்கள் கோபத்தைக் காட்டியுள்ளனர்.
ஒரு அமெரிக்க சில்லறை விற்பனையாளர் அமேசானின் ஒரு தளத்தில் 'யோகா தாமரை பாய்' என்ற பொருளை விற்பனைக்கு பதிவு செய்தார். இதன் மதிப்பு 18.67 டாலர். (15.78 யூரோக்கள்). அவர் பகிர்ந்திருந்த படத்தில் 'ஓம்' அச்சிடப்பட்டிருப்பதும் தெரிந்தது. இது இந்தியர்களை கோபப்படுத்தியது.
அமேசான் இப்படிப்பட்ட சர்ச்சையில் மாட்டிக்கொள்வது இது முதன்முறையல்ல. அண்மையில், விநாயகர் படத்துடனும், இந்திய பேனருடனும் பாய்கள் மற்றும் மிதியடிகளை விற்றதற்காக நெட்டிசன்கள் அமேசான் மீது எரிச்சலடைந்தனர். ஜனவரியில், விநாயகர் உருவம் அச்சிடப்பட்ட ‘பாத்ரூம் ரக்குகள்’ ‘புத்திசாலித்தனமான மண்டல இந்து கடவுள் பேபி மேட் செட்’ என்ற பெயரில் 21.99 டாலருக்கு விற்கப்பட்டன.
இந்து (Hindu) மதத்தை இழிவுபடுத்தியதாகவும், மதத்தைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் #BoycottAmazon இந்தியாவில் ட்விட்டரில் (Twitter) பிரபலமாக டிரெண்டாகி உள்ளது.
பல நெட்டிசன்களும் அமேசானின் இந்த செயலை நகை பிராண்ட் தனிஷ்கின் சர்ச்சைக்குரிய விளம்பரத்துடன் ஒப்பிட்டனர்.
வெவ்வேறு மதங்களுக்கு இடையிலான திருமணத்தை சித்தரிக்கும் தனிஷ்கின் விளம்பரம் சமூக ஊடகங்களில் கடும் பின்னடைவைப் பெற்றது. பலர் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'போலி மதச்சார்பின்மை' என்று இதன் மீது குற்றம் சாட்டினர்.
பிராண்டுகள், திரைப்படங்கள், பொருட்கள் ஆய்யவற்றுக்கு எதிரான போராட்டங்களும் பிரச்சாரங்களும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் (India) ஒரு வாராந்திர நிகழ்வாகி விட்டது.
ALSO READ: #BoycottTanishq: தனிஷ்க் நகைக்கடையை புறக்கணிக்கும் நெட்டிசன்கள். காரணம் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR