புதுடெல்லி: தமிழ்நாட்டின் குன்னூரில் IAF ஹெலிகாப்டர் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், தனது மனைவி மற்றும் 11 பேருடன் இறந்ததற்கு பிரபல பால்  நிறுவனமான அமுல் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுலின் வெளியிட்டுள்ள விளம்பரத்தில்,  கிராபிக்ஸ் மூலம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேனர் படத்தை உருவாக்கி நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தியது. 


இந்த அஞ்சலியை அமுல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. அதில், சிடிஎஸ் பிபின் ராவத் தனது சீருடை அணிந்து, போர் போன்ற சூழ்நிலைக்கு மத்தியில் நடந்து செல்லும் அனிமேஷன் படம் இருக்கிறது.



தேசத்தின் மீது பாதுகாப்புப் பணியாளர்களின் அசைக்க முடியாத அன்பை நினைவுகூரும் சிறப்புச் செய்தியையும் அமுல் நிறுவனம் எழுதியுள்ளது. ‘ஒவ்வொரு சிப்பாய்க்கும் அவர் நண்பராகவும், ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு வாளாகவும் இருந்தார்’… ஜெனரல் பிபின் ராவத் 1958-2021.” என்று அந்த அஞ்சலி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பாதுகாப்புப் பணியாளர்கள், டிசம்பர் 8-ம் தேதி தமிழ்நாட்டில் அவர்கள் பயணித்த எம்ஐ-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர் (CDS General Bipin Rawat Death). முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு பேனர் படத்தை உருவாக்கி இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறது அமுல் நிறுவனம்.


முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ராவத்தின் இறுதி ஊர்வலம் காமராஜ் மார்க்கில் உள்ள வீட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தொடங்கி ப்ரார் சதுக்கத்தில் உள்ள மயானத்திற்கு சென்றடையும். டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. ஜெனரல் ராவத்தின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெறும்.


ALSO READ | பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குறித்த முழுத் தகவல்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR