வைரல் வீடியோ: உல்லாசமாக படகு சவாரி செய்யும்போது, திடீரென அனகோண்டா கண் முன்னே வந்து சீறினால் என்ன ஆகும்? வைரல் வீடியோவாக சமூக ஊடகங்களில் வலம் வரும் என்பது இன்றைய உலகின் பதிலாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேசிலில் ஒருவர் படகில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது,  தண்ணீருக்கு அடியில் அமர்ந்திருந்த அனகோண்டா பாம்பை படம் எடுத்துக் கொண்டிருந்தார். 


என்னைய படம் எடுக்கற? நான் காட்டுறேன் என் படத்தை என்று அனகோண்டா திடீரென சீறிப் பாய்ந்து படமெடுத்தது. இதில் பாம்புக்கு பல்பு கொடுத்து உயிர் தப்பினார் அந்த அதிர்ஷ்டசாலி.


அவர் ஒரு வழிகாட்டி. அனகோண்டா பாம்பு தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்


38 வயதான ஜோயோ செவெரினோ Joao Severino என்பவர் இந்த வீடியோவை படம் பிடித்திருக்கிறார். இது தனக்கு நேர்ந்த விபத்தை தானே படம் எடுத்தது என்ற அபூர்வ வீடியோ வகையிலும் வருகிறது. 


வீடியோவில், அனகோண்டா தண்ணீரிலிருந்து துள்ளி தலையை நீட்டுவதை தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த வைரல் சம்பவம் ஜூன் 30ம் தேதியன்று மத்திய பிரேசிலின்,  கோயாஸில் அரகுவாயா ஆற்றில் நடைபெற்றது. சம்பவத்தை பார்த்து விட்டு, உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்...



படகில் பயணம் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழுவை செவெரினோ என்பவர் வழிநடத்திச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் எடுத்த வீடியோவில், இரண்டு மரக் கட்டைகளுக்கு இடையில் ஒரு அனகோண்டா தண்ணீருக்கு அடியில் சுருண்டு படுத்திருப்பது தெரிகிறது.


மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது


ஆனால், அதிர்ஷ்டசாலி கேமரமேன் + வழிகாட்டி செவரினோ அந்த வீடியோவில் இல்லை., அனகோண்டாவின் தாக்குதலிலும் சிக்கவில்லை. கேமராவை அனகோண்டாவின் மீது ஃபோகஸ் செய்த செவரினோ, பாம்பை நன்றாக படம் எடுக்க முயன்றுக் கொண்டிருந்தார்.


அப்போது, ​​அனகோண்டா திடீரென தனது ஓய்விலிருந்து மீண்டு தண்ணீருக்கு மேல் எழும்பி சீறி படகில் இருந்த அனைவரையும் பயமுறுத்தியது. அந்த வீடியோவில், தாக்குதலால் அதிர்ச்சியடைந்த செவெரினோ, அதன்பிறகு பதற்றத்துடன் சிரிப்பதைக் கேட்கலாம்.  


உலகின் மிகப்பெரிய பாம்பு
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அனகோண்டா மறைந்துவிட்டாலும், படகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். செவெரினோவை பாம்பு கடிக்கவில்லை. ஆனால், 30 அடி நீளமும் 550 பவுண்டுகள் எடையும் கொண்ட பச்சை அனகோண்டா பாம்பு திடீரென சீறினால் என்ன தோன்றும். 


மேலும் படிக்க | குரங்குப்பிடி வேண்டாம்மா: அம்மாவை தாஜா செய்ய செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு


நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின்படி, பெண் அனகோண்டாக்கள் ஆண்களை விட மிகப் பெரியவை. அனகோண்டாக்கள் பொதுவாக அமேசான் படுகையின் வெப்பமண்டல மழைக்காடுகளில் சதுப்பு நிலங்களிலும் மெதுவாக நகரும் நீரோடைகளிலும் வாழ்கின்றன. 


காட்டுப்பன்றி, மான், பறவைகள், ஆமைகள் என விலங்குகளை வேட்டையாடி அனகோண்டாக்கள் உயிர் வாழ்கின்றன. நஞ்சு இல்லாத பாம்புகளாக இருந்தால், அவை தங்கள் தசையால் இரையின் உடலை இறுக்கி, வேட்டையைக் கொன்று பசி தீர்க்கின்றன.


ஆனால், அதிர்ஷ்டசாலி வழிகாட்டிக்கு நூறு ஆயுசு என்று ஆசீர்வாதம் செய்து விட்டு சென்றதா அனகோண்டா?


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR