Snake Skin Video: பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Snake Skin Video: பாம்பைப் பார்த்தாலே வெளவெளத்துப் போகும் நிலையில், பாம்புத் தோல் உரிக்கும் தைரியமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2022, 08:02 PM IST
  • படமெடுக்கும் பாம்பை பார்த்திருக்கலாம்
  • சட்டை உரிந்து அம்மணமான பாம்பை பார்த்ததுண்டா
  • வைரல் வீடியோவில் சட்டையை உரிக்கும் பாம்பு
Snake Skin Video: பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது title=

வைரலாகும் பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ: சமூக ஊடகத்தில் ஆச்சரியமான பல விஷயங்களைக் காணலாம். நம்மை வியப்பில் மட்டுமல்ல அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய மற்றும் பயத்தில் உறைய வைக்கக் கூடிய ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்படுகிறன.

ஆபத்தான  பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதற்கு காரணம் அச்சம் தான். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். ஆனால்,பாம்பை வீடியோவில் பார்த்தால் பயம் இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.

தற்போது பாம்பின் சட்டை உரிக்கும் வீடியோ ஒன்று சமூகக் ஊடகங்களில் வைரலாகிறது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் சட்டை உரிப்பது அல்ல. முதலில் வீடியோவைப் பாருங்கள் அதன் பிறகு ஆச்சரியமான காரணத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.

தோலை உரிக்கும் நிகழ்வு உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று என்றாலும் பாம்பு சட்டை உரிப்பது மிகவும் விசேஷமானது. உடலில் விஷத்தை வைத்திருக்கும் பாம்பின் சட்டையிலும் நஞ்சு இருக்கும் என்ற பயமும் பலருக்கு உண்டு.

மனிதர்களாகிய நமது சருமத்தில் இருக்கும் தோல் திசுக்களும் அவ்வப்போது வெளியில் வந்துக் கொண்டுத் தானே இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் தோல் உரிதலில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.

பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும். பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | சீண்டியவரின் அந்தரங்க உறுப்பை பதம் பார்த்த பாம்பு வீடியோ வைரல்

பாம்பு அதன் சட்டையை உரிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.

தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும் என்று கூறப்படுகிறது. சருமத்தில் இளக்கத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த செயல்முறையை பாம்பு செய்யும். அதன்பிறகு, தனது மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்து பாம்பு தேய்க்கும்போது, அதன் தோல் உரியத் தொடங்கும்.  

இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும். அதிக வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும். தோலை உரிக்கும் தன்மை என்பது வெப்பத்தைப்பொறுத்தும், அவற்றின் இரை எடுக்கும் தன்மையைப் பொறுத்தும் மாறும். 

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

ஆனால், தனது தோலை உரிப்பதற்கு முன்னரே உணவைத் தவிர்த்துவிடும் பாம்புகள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிவிடும். பாம்பின் உரித்த சட்டை முழுவதுமாக இருந்தால், அது ஆரோக்கியமான பாம்பின் சட்டை என்று கருதப்படுகிறது.  

ஆனால் பாம்புகளை கண்டு அஞ்சாத சிலரும் உள்ளனர். பாம்புகளை அசால்டாக கையாளும் ஒரு நபரின் வீடியோ ஒன்று, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஆச்சரியமான காட்சியைக் காணலாம். 

சுவாரஸ்யமாகவும் திகிலாக இருக்கும் இந்த வீடியோவில் பாம்பின் சட்டையை லாவகமாக ஒரு நபர் உரிக்கிறார். இதுதான் ஆச்சரியத்திற்கு காரணம். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பின் சட்டையை உரிக்கிறார். இந்த த்ரில்லான வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரலாகிறது.

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News