பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்துக்கு ‘லைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'அர்ஜுன் ரெட்டி' (Arjun Reddy) படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda). தமிழிலும் 'நோட்டா' (NOTA) படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்திய அளவில் பிரபலமாகி உள்ள அவர் அடுத்து ஹிந்தியிலும் பிரபலமாகப் போகிறார்.


விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே (Ananya Panday) நடிப்பில் உருவாகி வரும் படம் ‘LIGER’ (Tiger+Lion = Liger). இப்படத்தை பூரி ஜெகந்நாத் (Puri Jagannadh) இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் (Dharma Productions) தயாரித்து வருகிறது.


ALSO READ | MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்!


இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., ''இந்திய அளவிலான எங்கள் படத்தைப் பற்றி அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வழக்கமான சமூகக் கட்டமைப்பின்படி என்போன்ற பின்னணியிலிருந்து வரும் ஒருவர் இந்த இடத்துக்கு அருகில் கூட வரமுடியாது. ஆனால் அதீத ஆர்வம், கடின உழைப்பின் மூலம் நாங்கள் இங்கே வந்துள்ளோம்'' என விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார். 



போஸ்டரில் படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல சிங்கத்தின் ஒரு பாதியும், புலியின் ஒரு பாதியும் இடம்பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டரின்படி படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR