மான்ஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்தி மாலை நேரம் என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'மான்ஸ்டர்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவும், விஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்துள்ளனர்


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்தி மாலை நேரம் என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



முன்னதாக இப்படத்தினை குறித்து இயக்குநர் தெரிவிக்கையில்... நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள திரைப்படம், குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருந்தாலும் நாங்கள் வேறு வகையில் இந்த படத்தினை எடுத்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.


கடந்த அக்டோபர் 1-ஆம் நாள் இப்படத்தின் அனிமேஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இந்த அனிமேஷன் போஸ்டரானது தமிழ் திரையுலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது இந்நிலையில் தற்போது இப்படத்தின் அந்தி மாலை நேரம் என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இப்படலுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏப்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் மே 17-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.