குழந்தைகளின் சேட்டை தனி ரகம் என்றாலும், இந்த வீடியோவில் நடந்து செல்பவர்களை வம்புக்கு இழுக்கும் குழந்தை விவகாரமானதாக இருக்கிறது. யாரோ ஒருவருடன் செல்லும் குழந்தை எதிர்வரும் பெண் மீது வேண்டுமென்ற மோதி சண்டைக்கு இழுக்கிறது. வீடியோவை பார்த்தவுடன் உங்களுக்கும் அப்படி தான் தோன்றும். ஆனால், அந்த குழந்தை நடந்து செல்லும் பெண்ணை வம்புக்கு இழுக்காது. மாறாக உதவி கேட்கும். தன்னை கடத்தி செல்பவருக்கு தெரியாமல் இருக்க, எதிர்வரும் பெண் மீது வேண்டுமென்றே மோதி, தான் கடத்தப்பட்டிருப்பதை சிக்னல் மூலம் உணர்த்திவிடும். அந்த சிக்னலைப் பார்த்த பெண், உடனடியாக அந்த கடத்தல்காரனிடம் இருந்து பெண் குழந்தையை மீட்டுவிடுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிரிந்த குழந்தையுடன் சேரும் ஸ்லாத் அம்மா: கண் கலங்க வைக்கும் க்யூட் பாசமலர்கள்


விழிப்புணர்வு மிக்க இந்த வீடியோ காண்போருக்கும் பெரும் வியப்பையும் கற்றலையும் கொடுக்கிறது. உலகம் முழுவதும் காலங்காலமாக இருப்பது குழந்தை கடத்தல் என்பது. இந்த கொடூர கடத்தலை மட்டும் எத்தனை டெக்னாலஜி வந்தாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தினம்தோறும் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் மிக மிக அதிகம். இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்கே இயங்கிக் கொண்டிருக்கிறது.



இத்தகைய கடத்தல்காரர்களிடம் இருந்து குழந்தைகள் விழிப்பாகவும், ஆபத்தில் இருக்கும்போது சமயோசித்தமாக தப்பிக்கவும் பெற்றோர்கள் சில வழிமுறைகள் கட்டாயம் தேடிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் எளிமையாக தப்பிக்க இந்த வழிமுறைகள் ஆபத்து காலத்தில் கட்டாயம் கை கொடுக்கும். அப்படியான விழிப்புணர்வு வீடியோ தான் இது. இந்த வீடியோ முழுவதும் கடத்தல்காரர்களிடம் இருக்கும்போது குழந்தைகள் எந்தமாதிரியான சிக்னலை தெரிவிக்க வேண்டும் என்பது தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. 


ஒரு குழந்தை சிக்னல் காண்பிக்கும் அடுத்த நொடி, பொதுமக்கள் உஷாராகி காப்பாற்றுகின்றனர். சிக்னலை குழந்தைகளும், பொதுமக்களும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் இத்தகைய கடத்தல்களில் இருந்து ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்ற உதவியாக இருக்கும். இணையத்தில் இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | என்னய்யா நடக்குதிங்க: மாலைக்கு பதில் பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR