என்னய்யா நடக்குதிங்க: மாலைக்கு பதில் பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள், வைரல் வீடியோ

Bride Groom OMG Video: எங்காவது பாம்பை மாலையாக மாற்றிக்கொள்ளும் சடங்கை பார்த்துள்ளீர்களா? அப்படியும் திருமணங்கள் நடக்கின்றன. இப்படி ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2022, 05:01 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
என்னய்யா நடக்குதிங்க: மாலைக்கு பதில் பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வெவ்வேறு இடங்களில் திருமணங்களில் சடங்குகளும் வேறுபட்டிருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் முறைகளை பின்பற்றி திருமணம் செய்து கொள்கின்றனர். வட இந்தியாவில் வேறு விதமாகவும், தென்னிந்தியாவில் வேறு விதமாகவும் திருமணம் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | மாலை வேண்டாம் என சீன் போட்ட மணமகள், கியூட்டா சமாளிச்ச மணமகன்: வைரல் வீடியோ 

எனினும், எங்காவது பாம்பை மாலையாக மாற்றிக்கொள்ளும் சடங்கை பார்த்துள்ளீர்களா? அப்படியும் திருமணங்கள் நடக்கின்றன. இப்படி ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் காணும் காட்சியை பார்த்து அனைவரும் திகைத்து போயுள்ளனர். இந்த வித்தியாசமான திருமண வீடியோ வந்தவுடனேயே சமூக வலைதளங்களில் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது.

மாலைக்கு பதில் கழுத்தில் ஏறிய பாம்பு 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், திறந்த வெளியில் திருமணம் நடப்பதைக் காண முடிகின்றது. இந்த நேரத்தில் மணமக்களை காண அதிக விருந்தினர்களும் வந்துள்ளனர். மாலை மாற்றும் நிகழ்வு தொடங்குகிறது. ஆனால், இங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. 

மணமகள் தன் கைகளில் ஒரு பாம்பைக் கொண்டு வந்து மணமகனின் கழுத்தில் போடுகிறார். அடுத்தது மணமகனின் முறை. அவர் ஒரு பெரிய மலைப்பாம்பைக் கொண்டு வந்து மணமகளின் கழுத்தில் அணிவித்தார். மாலை மாற்றும் இடத்தில் பாம்புகள் மாற்றப்பட்டு மாலை மாற்றும் சடங்கு முடிகிறது. 

பாம்பை மாலையாக மாற்றிக்கொண்ட மணமக்களின் வீடியோ இதோ: 

இப்படி ஒரு திருமணத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் 

இந்தக் காணொளியில் காணப்படுவது போன்ற காட்சிகளை நீங்கள் முன்னர் பார்த்திருக்க முடியாது. வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து தங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ psycho_biharii என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

மேலும் படிக்க | மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மாப்பிள்ளை: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News