நேட்டோவின் உறுப்பினராக வேண்டும் என உக்ரைன் விரும்பியதால், அந்நாட்டுக்கு எதிரான போரை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அச்சுறுத்தல்களைப் புறக்கணித்து, ரஷ்யப் படைகள் உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளன. இந்தப் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதிக்கம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’இயற்கையின் பேரதிசயம்’ ஆகாயத்தை தொடும் அலைகள் - Viral Video


உலகின் புதிய பேரரசராக ரஷ்யா வருமா?


ரஷ்யாவின் இந்த ஆதிக்கம் உலக பேரரசாக எதிர்காலத்தில் உருவெடுக்குமா? என்ற விவாதத்தையும் ஏற்படுத்தயுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து, ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறதா? என பேசப்பட்டு வரும் சூழலில் பாபா வாங்காவின் கணிப்பும் வெளியாகியுள்ளது. அவரின் கணிப்பின்படி, ரஷ்யா மிகப்பெரிய வல்லரசாக உருவாகும் என கூறியுள்ளார்.


ரஷ்யாவின் ஆதிக்கம்


எதிர்காலத்தில், ரஷ்யா உலகின் ராஜாவாக மாறும். ஐரோப்பா தரிசு நிலமாக மாறும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். பாபா வெங்கா, 'எல்லாமே பனிக்கட்டி போல உருகும். ஒரு விஷயத்தை மட்டும் யாரும் தொட முடியாது அது ரஷ்யாவின் பெருமை. ரஷ்யாவை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யா அனைவரையும் தன் வழியிலிருந்து விடுவித்து உலகை ஆளும், விளாடிமிர் புகழை மறைக்க முடியாது. அவர் உலகை ஆளுவார் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். 


மேலும் படிக்க | ரஷ்யர்கள் அதிகம் சிரிக்கமாட்டார்களாம்..! காரணம் என்ன தெரியுமா?


பாபா வெங்கா யார்?


பாபா வெங்காவின் உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. அவர் 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார். அவருக்கு 12 வயதாக இருந்தபோது, ​​கடுமையான புயலால் பார்வை இழந்தார். புயல் அவரைக் குருடாக்கியிருந்தாலும், எதிர்காலத்தை கணிப்பதற்கான ஆற்றல் அவரிடம் இருந்தது. 5079 ஆண்டு வரை அவரது கணிப்புகள் உள்ளன. வெட்டுக்கிளி தாக்குதல், குடிநீர் தட்டுப்பாடு, நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் உயிரிழந்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR