ரஷ்யர்கள் அதிகம் சிரிக்கமாட்டார்களாம்..! காரணம் என்ன தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின்படி மக்கள் நடந்துகொள்ளும் விதத்திலும், பேசும் விதத்திலும் வேறுபாடுகள் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2022, 01:49 PM IST
  • அதிகம் சிரிக்காத ரஷ்யர்கள்
  • வரலாற்று ரீதியான பின்புலம்
  • எப்போது வாய்விட்டு சிரிப்பார்கள்?
ரஷ்யர்கள் அதிகம் சிரிக்கமாட்டார்களாம்..! காரணம் என்ன தெரியுமா? title=

 உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின்படி மக்கள் நடந்துகொள்ளும் விதத்திலும், பேசும் விதத்திலும் வேறுபாடுகள் உள்ளன. அந்தவகையில் கலாச்சார அடிப்படையில் அதிகம் சிரிக்கும் மக்கள் மற்றும் சிரிக்காத மக்களையும் வேறுபடுத்த முடியும். வரலாற்று நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்யர்கள் பொதுவாகவே அதிகம் சிரிக்கமாட்டார்களாம். அவர்கள் சிரிப்பதில் ஏன் கஞ்சத்தனமாக இருக்கிறார்கள் என்பதற்கு சில காரணங்களும் உண்டு.

வரலாறு மற்றும் காலநிலை 

பல நூற்றாண்டுகளாக, ரஷ்ய மக்கள் தங்கள் இருப்புக்காக தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. இது தவிர, அங்குள்ள காலநிலையும் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கொண்டது. அங்கு வாழ்வதற்கு கடுமையாக போராடத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், கவலை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உதட்டளவில் சிரிப்பு தென்பட்டாலே அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | முதலையின் செயலால் முடங்கிய சாலை! வைரலாகும் வீடியோ!

நகைச்சுவை அரிது

மற்றவர்களைபோல் ரஷ்யர்கள் வாய்விட்டு சிரிக்கமாட்டார்கள். அப்படி சிரிப்பது என்பது அரிது. வரலாற்று ரீதியாக ரஷ்ய மக்கள் உத்தடளவில் சிரிப்பது மட்டுமே அவர்களின் சிறப்பியல்பாக இருக்கிறது. அதனால், இந்தியா மற்றும் பிறநாடுகளில் உள்ள மக்களைப் போல் ஒப்பீட்டளவில் வாய்விட்டு சிரிப்பது என்பது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. 

ரஷ்யர்களின் எண்ணம்

ரஷ்யர்கள் வாய்விட்டு சிரிக்கும்போது பற்கள் தெரிவதை மிக அசிங்கமான ஒன்றாக எண்ணுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாய்விட்டு சிரிப்பது என்பது குதிரை சிரித்தால் எப்படி இருக்குமோ, அப்படி கற்பனை செய்துகொள்வார்கள். மேலும், பற்கள் தெரிய சிரிப்பது என்பது வேலைக்கார மனோபாவம் என கருதுவதால், வாய்விட்டு சிரிப்பதை தவிர்ப்பார்களாம்.

மேலும் படிக்க | ஆற்றை அந்தரத்தில் கடக்கும் கோழி - Viral Video

இயல்பான சிரிப்பு

உதட்டளவில் சிரிப்பதை இயல்பான சிரிப்பாக கருதும் அவர்கள், நெருங்கியவர்களுடன் மட்டுமே மனம் திறந்த சிரிப்பை வெளிப்படுத்துவார்களாம். அந்நியர்களுடனான சந்திப்பின்போது அத்தகைய சிரிப்பை அவர்களிடம் கிஞ்சித்தும் எதிர்பார்க்க முடியாது. மேலும், ஒருவருடன் சிரித்து பேசினால் அவர் நன்கு அறிமுகமானவர் என்பதற்கான சமிக்கை. மேலும், அவர் மீது அன்பு செலுத்துகிறார் என்றும் பொருள் கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News