ஆகாயத்துக்கும், கடல் நீருக்கும் இடையிலான இடைவெளி பல்லாயிரம் கிலோ மீட்டர். ஆனால், அந்த ஆகாயத்தை கடல் அலை தொட்டிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?. சுனாமி வரும்போது கரை ஓரங்களில் எழும் ராட்சத அலைகளை பார்த்து மிரளும் மக்கள், அமைதியான நேரத்தில் கடலின் நடுவே ஆகாய உயரத்துக்கு எழும் அலைகளின் அழகை பார்த்து ரசித்திருக்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க | ஆற்றை அந்தரத்தில் கடக்கும் கோழி - Viral Video
மீனவர்கள் என்றாலும் கூட அரிதாகவே அத்தகைய காட்சிகளை பார்த்திருக்கக்கூடும். இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான இத்தகைய காட்சியைக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆகாயத்தில் இருந்து தாழ்த்திருக்கும் மேகக்கூட்டங்களை, வானுயர எழும்பும் அலைகள் அழகாக தொட்டுத் தீண்டிச் செல்லும் காட்சி காண்போரை பரவசம் கொள்ளச் செய்கிறது.
Waves touching the Clouds pic.twitter.com/nVzvFOpCh3
— Science & Nature (@Sci_Nature0) December 21, 2021
இது எப்படி சாத்தியம் என்றால் இயற்கையிடம் கேட்டால் மட்டுமே பதில் உண்டு. குளிர் காலங்களில் மேகக்கூட்டங்கள் தாழ்ந்திருக்கும் அல்லவா? அத்தகைய நேரத்தில் கடல் அலைகள் மேல் எழும்பும்போது மேக கூட்டங்களை தொடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை அறிந்த புகைப்பட வல்லுநர் ஒருவர், இயற்கையின் இந்த அசியத்தை அழகாக படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகியிருக்கும் வீடியோவில், அமைதியாக இருக்கும் கடல் திடீரென அலையாக மேல் எழும்புகிறது. நிலையாக இருக்கும் மேகக்கூட்டங்களை மெதுவாக தீண்டி, மீண்டும் வழக்கமாக நிலை கொள்கிறது. ஸ்லோ மோஷனில் இருக்கும் வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும் படிக்க | பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR