வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பல வீடியோக்கள் பல சமயம் மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கின்றன. இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது, இது ஒரு பெண் மற்றும் கரடியுடன் தொடர்புடையது. இதில், பூங்காவில் ஒரு பெண் களைப்பாறுவதை முதலில் காண முடிகின்றது. ஆனால் அடுத்த நொடியே அங்கு ஒரு கரடி வருகிறது. அடுத்து நாம் வீடியோவில் காணும் காட்சி ஆச்சரியத்தை அளிக்கின்றது. 


மேலும் படிக்க | திருமணத்தில் திடீரென அதை வெட்டிய மணமகள்... உறைந்துபோன உறவினர்கள் - வைரல் 


பெண்ணின் அருகில் வந்த குரங்கு


ஒரு பூங்காவில் ஒரு பெண் படுத்திருப்பதையும், சிறிது நேரம் கழித்து கரடி அங்கு வருவதையும் வீடியோவில் காண்கிறோம். கரடி அவர் அருகில் வரும்போது சரியாக பெண்ணும் கண்ணை திறக்கிறார். அவர் மிக அருகில் கரடியை பார்க்கிறார். ஆனால், டென்ஷன் ஆகாமல், மயக்க நிலையில் இருப்பது போல நடிக்கிறார். அருகில் வரும் கரடி பின்னர் விலகிச் சென்று விடுகிறது. இந்த வகையில் சாமர்த்தியமாக பெண் தன் உயிரை காப்பாற்றிக்கொள்கிறார். 


கரடியை ஏமாற்றிய பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 



பெண் மற்றும் கரடியின் இந்த வீடியோ videonation.teb என்ற இன்ஸ்டாகிராம் கணகில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வௌகிறார்கள். 


மேலும் படிக்க | 'ஏய் ஹெலோ மிஸ்டர் புலி’: கடுப்பேத்திய குரங்குகள், காண்டான புலி, சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ