சிங்கங்களின் காதலும் மோதலும்: மனிதனோ மிருகமோ, போட்டி என்றால் யாரும் பின்வாங்கத் தயாராக இருப்பதில்லை. இன்று சமூக ஊடகங்கள் மூலம், விலங்குகளின் காட்டு வாழ்க்கையைப் பார்த்து வியக்கிறோம். சமூக ஊடகங்கள், நமக்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன. அறிவியலின் புரட்சியான இணையதளம், இயற்கையை ரசிக்க வைக்கிறது. காதலை மட்டுமல்ல, மோதலையும் பார்த்து ரசிக்க உதவும் வீடியோக்கள் நம்முடைய தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது.
சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், இன்று விலங்குகளின் பல்வேறு நுணுக்கமான அசைவுகளையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் நாம் பார்த்து ரசிக்க் முடியாது.
தனி உலகமாக இயங்கி வரும் இணைய உலகில், பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், சில பின்விளைவுகளையும் ஏற்படுத்தினால், பொழுது போவதே தெரியாமல் செய்யும் மாயத்தையும் சமூக ஊடகங்கள் செய்கின்றன.
மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?
சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சிங்கங்களின் வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சிங்கங்கள் ஓட்டப்பந்தயம் நடத்தும் அரியக் காட்சி வெளியாகி வைரலாகிறது.
மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?
காட்டிற்கு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம், சக்தி வாய்ந்தது என்பது, அவற்றின் நடையிலேயே தெரியும் என்றாலும், பிடரி மயிர் சிலிர்க்க, சீறிப் பாயும் சிங்கங்களின் ஓட்டம் காட்டையே அதிர வைக்கிறது.
ஜாலியாக சென்றாலும், இந்த வீரியமிக்க சிங்களின் பந்தயம், பார்ப்பவர்களை அதிர வைக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் ஓடும் சிங்கத்தின் இந்த வீடியோவைப் பார்த்தால் ஏன் காட்டு ராஜா என்று சிங்கத்திற்கு பெயர் வந்தது என்ற சந்தேகம் யாருக்கும் வராது.
விலங்குகளுக்கு இடையே சண்டை எழுவது சகஜம். அதுவும், ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் விலங்குகளின் வீடியோக்களுக்கு மத்தியில், சட்ட திட்டங்கள் வகுத்து நடத்தும் ஓட்டப் பந்தயம் போல அழகாக ஓடும் சிங்கங்களின் பந்தயம் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
வீரியமாய் ஓடும் இல்லையில்லை பறக்கும் சிங்கங்களின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனையை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ