‘அம்மா.. நான் போக மாட்டேன்’: அழ வைக்கும் குரங்கின் வைரல் வீடியோ

Emotional Monkey Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் அழாமல் இருக்க முடியாது. மனித இதயத்தை பிழிந்தெடுக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2023, 01:33 PM IST
  • இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன.
  • இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
‘அம்மா.. நான் போக மாட்டேன்’: அழ வைக்கும் குரங்கின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகளே அவர்களின் உலகம்!! குழந்தைகளின் உலகமும் அவர்களின் பெற்றோரைச் சுற்றியே சுழல்கிறது. இந்த அழியாத, தெய்வீக இணைப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல, இயற்கை அன்னையின் ஒவ்வொரு படைப்புக்கும் உள்ளது. இந்த பிணைப்பை பற்றிய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இயற்கை அன்னையின் அனைத்து குழந்தைகளும் மிக அழகான, அற்புதமான, விலைமதிப்பற்ற படைப்புகளே ஆகும். எனினும், சில துரதிருஷ்டவசமான வேளையில், இந்த குழந்தைகளுக்கு மத்தியில் பிளவுகளும் ஏற்படுகின்றன. 

பொதுவாக குழந்தைகளும் பெற்றோரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது மிகவும் துன்பத்தை ஏற்படுத்துகின்றது. இது மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் அசாதாரண சூழ்நிலைகளை உருவாக்குகிறது. அதுவும் அந்த குழந்தைகள் கைக்குழந்தைகளாக இருந்தால், வலி இன்னும் அதிகமாக இருக்கும். 

மேலும் படிக்க | வாடா பாத்துர்லாம் நீயா நானானு, பாம்புக்கு பாடம் கற்பித்த அணில்: வீடியோ வைரல் 

இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அனால், இதில் காணப்படும் தாயும் சேயும் வித்தியாசமானவர்கள். இந்த வீடியோவின் துவக்கத்தில், ஒரு குட்டி குரங்கு ஒரு இளம் பெண்ணை இறுகப் பற்றிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. அதை ஒரு நபர் அந்த பெண்ணிடமிருந்து வாங்கிக்கொள்கிறார். ஆனால், பெண்ணை விட்டு பிரிய மனமில்லாமல், குரங்கு அழத் தொடங்குகிறது. குழந்தை அழ ஆரம்பித்தவுடன், அந்தப் பெண் மீண்டும் அதை கையில் எடுத்துக்கொள்கிறார். 

பெண்ணின் அரவணைப்பில் வந்தவுடன், அது அமைதியாக இருக்கிறது, வசதியாக அமர்ந்துகொள்கிறது. அந்த பெண்ணின் மீது குரங்கு குட்டிக்கு இருக்கும் பாசமும் பிணைப்பும் அதன் முகத்தில் காணக்கிடைகிறது. அந்த பெண்ணின் முகத்திலும் தாயன்பு ததும்பி வழிகிறது. 

குரங்கு மற்றும் அதன் ஆசை அம்மாவின் வைரல் வீடியோவை இந்த வீடியோவில் காணலாம்:

இந்த வீடியோ @vijh_mohit என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | பெண் சிங்கத்திற்காக குஸ்தி போடும் காட்டு ராஜாக்கள்! காதலால் விளைந்த மோதல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News