மயில்கள் பொதுவாக  பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையான மயிலின் இரு பேரினங்களுள் ஒன்றான, பேவோ பேரினத்தினுள் அடங்கும், cristatus என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண் மயிலின் கழுத்து, மார்பு, வயிறு பளபளக்கும் கருநீல நிறத்திலும், இறக்கைகளில் வெள்ளையும், பழுப்புமாக இறகுகள் போன்ற பட்டைகளும் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்திலும், பளபளக்கும் கருநீல வட்டங்களையும் கொண்டிருக்கும். தோகையில் உள்ள சில சிறகுகளின் முனை பிற வடிவத்தில் இருக்கும். ஆண் மயில் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை சுமார் 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் சுமார் 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை சுமார் 4-6 கிலோ இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். 


மேலும் படிக்க | திருட வந்த தம்பிகளுக்கு வந்த சோதனை: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


இந்த நிலையில் பறவை இனங்களில் மிக அழகானது மயில் என்றால் அது மிகை அல்ல. அதுவும் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு காணக்கண்கோடி வேண்டும். அப்படி ஒரு கொள்ளை அழகை கொண்ட மயில், வானில் கரு மேகங்கள் சூழ்ந்த தட்பவெப்ப நிலையில், பெண் மயிலை கவர்வதற்காக தனது அழகான தோகையை விரித்து ஆடுவது பார்ப்பவர்களை வியக்க வைக்கும். இப்படி காண்போரை கவரும் மயில் தனது தோகையை விரித்து ஆடும் கண்கொள்ளாக் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. 


இந்த வீடியோவில், மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடுகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், மயில் தோகையை விரித்து ஆடும் அழகை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி, லைக்குகளையும், கருத்துக்களையும் அள்ளி வீசியுள்ளனர். எனவே இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களை இப்போதெல்லாம் அரிதாகிவிட்ட சூழலில், அவை தோகை விரித்தாடும் காட்சியை வீடியோக்களில் தான் பார்க்க முடிகிறது.


வீடியோவை இங்கே காணுங்கள்: