திருட வந்த தம்பிகளுக்கு வந்த சோதனை: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Viral Video: ஆபத்தான திருடர்களை பார்த்திருப்பீர்கள், ஆனால் ஏமாளி திருடர்களை பார்த்துள்ளீர்களா? இந்த வைரல் வீடியோவில் காணலாம்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2023, 05:10 PM IST
  • சமீப காலங்களில் பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
  • இவற்றில் பலவற்றை கண்டால் நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏறபடுகின்றது.
  • நம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்களை நாம் தினம் தினம் காண்கிறோம்.
திருட வந்த தம்பிகளுக்கு வந்த சோதனை: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமீப காலங்களில் பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இவற்றில் பலவற்றை கண்டால் நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏறபடுகின்றது. நம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்களை நாம் தினம் தினம் காண்கிறோம். இணையத்தில் பல குற்றங்களின் வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. இப்படி கூட செய்வார்களா என நம்மை வியக்க வைக்கும் வீடியோக்களும் இங்கு உள்ளன. 

வங்கிகள், கடைகள், அங்காடிகள் என பல இடங்களில் சிலர் பொருட்களை திருடும் வீடியோக்களும், திருட முயற்சிக்கும் வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி பகிரப்படுகின்றன. அவற்றில் குற்றவாளிகள் பயமின்றி குற்றங்களைச் செய்வதையும் நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சமீபத்திலும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் இரண்டு திருடர்கள் வீட்டிற்குள் இருந்து ஸ்கூட்டியை திருட முயன்றனர். ஆனால் அந்த முயற்சியில் அவர்கள் தோல்வியையே பெற்றனர். 

தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவது அவசியமில்லை. இந்த விதிகள் கடின உழைப்பாளிகளுடன் திருடர்களுக்கும் பொருந்தும். சமீபகாலமாக வைரலாகி வரும் வீடியோவில் இதைத்தான் பார்க்கிறோம். ஸ்கூட்டியில் வந்த இரு திருடர்கள் ஸ்கூட்டியை திருட முயலும்  வீடியோ இது. ஆனால், அவர்களால் அந்த ஸ்கூட்டியை திருட முடியவில்லை. இது மட்டுமல்லாமல், அவர்களது ஸ்கூட்டியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. 

மேலும் படிக்க | இங்க மாப்பிள்ளை சண்டை போட, அங்க வேற ஒருத்தன் தாலிய கட்ட... சூனாபானா... போச்சா!! வைரல் வீடியோ

ஸ்கூட்டி திருடர்களுக்கு கிடைத்த ஆப்பு: வீடியோவை இங்கே காணலாம்:

திருட்டின் போது திருடர்களுக்கே இழப்பு

வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திருட்டு தொடர்பான இந்த சிசிடிவி காட்சிகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதில் இரண்டு திருடர்கள் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்கூட்டியை திருட வருகிறார்கள், ஆனால் அவர்கள் அதை ஸ்டார்ட் செய்யத் தொடங்க முயற்சிக்கும் போது, வீட்டிற்குள் இருந்து சிலர் வரவே, அவர்களை பார்த்து வேகமாக ஓடுகிறார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்கள் ஓடிய ஓட்டத்தில், தங்கள் சொந்த ஸ்கூட்டியையும் அங்கேயே விட்டுச் செல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. 

வீடியோ 31 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

@cctvidiots என்ற கணக்கு மூலம் ட்விட்டரில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இதன் தலைப்பில், 'இரண்டு திருடர்கள் ஒரு வீட்டில் ஸ்கூட்டியைத் திருட முயல்கிறார்கள், ஆனால் அவர்களின் சொந்த ஸ்கூட்டியை இழக்கிறார்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த பயனர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தி எழுதும் நேரம் வரை சமூக ஊடகங்களில் இந்த வீடியோ 31.9 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

மேலும் படிக்க | வெறித்தனமான சண்டை..ராட்சத மலைப்பாம்பை பதம் பார்த்த காட்டு ராஜா:திக் திக் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News