பாம்புகளை வைத்து வித்தை காண்பிப்பதை சிலர் உலக அதிசயங்கள் போல் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். செல்லும் வழியில் எதிரில் தென்பட்டாலோ அல்லது வீடுகளுக்கு வரும்போதோ அவற்றை வைத்து வித்தை என்ற பெயரில் தொந்தரவுக்களுக்கு உள்ளாக்குகின்றனர். இன்னும் சிலர் பாம்புகளை வைத்து தான் தங்களின் அன்றாட பிழைப்புகளைக் கூட நடத்திக் கொண்டிருக்கின்றனர். விஷம் முறிவு செய்யப்பட்ட பிறகு அருகில் வைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஏதோ அதிமேதாவிகள் போல் தங்களை நினைத்துக் கொண்டு பாம்புகளை அருகில் வைத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென அவை கொத்திவிட்டால் உயிரிழப்புகளை தடுக்க முடியாது. ஆனால் இதனைப் பற்றி கொஞ்சமும் யோசிக்கவே மாட்டார்கள். அப்படியான சம்பவம் தான் பீஹாரில் இப்போது நடைபெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 மேலும் படிக்க | பூனையை காப்பாற்றும் நாய்: நெட்டிசன்களை உலுக்கிப்போட்ட வைரல் வீடியோ


பாம்புகளை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதற்கு ராக்கி கட்ட முற்பட்டபோது அதனால் கொத்தப்பட்டு உயிரிழந்திருக்கிறார். மன்மோகன் என்ற அவருக்கு 25 வயது மட்டுமே என்பது வேதனைக்குரிய விஷயம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது என்றாலும், விழிப்புணர்வுக்காக இப்போது போட வேண்டிய தேவை இருக்க தான் செய்கிறது. இன்னும் சிலர் பாம்புகளின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளாமல் அவற்றை தேவையில்லாத தொந்தரவுக்களுக்கு உள்ளாக்குகின்றனர்.


பாம்பு பால் குடிக்கும், அடித்தால் தேடி வந்து பழிவாங்கும் என்ற கற்பனைக் கதைகள் இருக்க செய்கிறது. வட மாநிலங்களில் இந்த நம்பிக்கை என்பது இன்னும் தீவிரமாக மக்களிடையே காணப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை பாம்பு என்பதை கடவுளாகவும் பார்க்கின்றனர், வித்தை காண்பித்து பிழைப்பு தொழிலாகவும் உபயோகப்படுத்துகின்றனர். அப்படி பாம்புகளை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர் மன்மோகன், அதற்கு ராக்கி கட்டுகிறேன் என முயற்சித்துள்ளார். அப்போது கவனக்குறைவாக இருந்த சமயத்தில் விஷத்துடன் இருந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று தீண்டிவிடுகிறது. 



அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாம்பு கடித்த சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்திருக்கிறார். பாம்புக்கு ராக்கி கட்டச் சென்று, அதன் மூலம் உயிரையே பறிகொடுத்திருக்கிறார். விலங்குகளை மதிக்க வேண்டும், அவற்றின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உஷாராக இருக்க வேண்டும். என்ன தான் பழக்கமாக விலங்காக இருந்தாலும் அதற்குரிய குணாதிசயத்தில் இருந்து அது எப்போதும் மாறாது என்பதை ஆணித்தரமாக நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். இல்லையென்றால் சில நொடிகளில் உயிரிழப்பதை தடுக்க முடியாது.


மேலும் படிக்க | சவாரி செய்ய போய் பல்பு வாங்கிய நபர்: மாஸ் காட்டிய குதிரை.... வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ