கணவரின் 36_வது பிறந்த நாளை கோவாவில் கொண்டாடிய நடிகை
பிபாஷா பாசுவின் கணவர் கரண் சிங் குரோவரின் 36_வது பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார்கள்.
பாலிவுட் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் கரண் சிங் குரோவர் 36 வயதை அடைந்தார். பிப்ரவரி 23, 1982-ல் பிறந்தார் கரண் தனது 36_வது பிறந்த நாளை, நடிகையான தன் மனைவி பிபாஷா பாசுவுடன் கொண்டாடினார்.
பிபாஷா தனது கணவரின் பிறந்தநாளுக்கு விசேஷ ஏற்பாடுகள் செய்தார். கூட்டம் நிறைந்த மும்பையை தவிர்த்து, கோவாவில் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கணவரின் பிறந்த நாளை கொண்டாடினர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களில் எடுத்த பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்ட்டாகிராம் வெளியிட்டுள்ளார்.