புத்திசாலித்தனமாக தண்ணீர் குடிக்கும் பிஸிக்ஸ் தெரிந்த குருவி - Viral Video
தாகம் கொண்ட பறவை ஒன்று புத்திசாலித்தனமாக செயல்பட்டு தண்ணீர் குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அறிவியில் இல்லாத இடமே இல்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் இருக்கிறது. குறிப்பாக, இயற்பியல் இருக்கிறது. வெறுமனே பார்த்தால் அது என்ன? என்று கேட்பீர்கள். ஆனால், ஒரு பொருளை நகர்த்துவதற்கும், ஒரு பொருளை தூக்குவதற்கும் பின்னணியில் இருக்கும் இயற்பியலை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலாளர்கள் கண்டுபிடித்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு இப்போது என்ன? என கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
மேலும் படிக்க | ’இயற்கையின் பேரதிசயம்’ ஆகாயத்தை தொடும் அலைகள் - Viral Video
அறிவியலின் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், மிக கடினமாக இருக்கும் வேலைகளை மிகமிக எளிதாக செய்ய முடியும் அல்லது நீங்கள் தேடிச் செல்லும் பொருள் கூட எளிதாக உங்களிடத்தில் வந்து சேரும். மாயாஜால வித்தைகள் என ஏமாற்றும் சிலர்கூட இயற்பியலின் விதிகளை தெரிந்து கொண்டு தான் மக்களை வாயடைக்க வைக்கிறார்கள். அப்படியான அறிவியல் விதிகள் மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது.
பள்ளிக்கூடம் சென்று படிக்காத பறவைகளுக்கு கூட அந்த விதி தெரியும். அவற்றிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தவகையில் பிஸிக்ஸ் தெரிந்த குருவி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதாவது தாகத்துடன் இருக்கும் குருவி, தண்ணீர் தேடி அலைகிறது. அப்போது வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இருப்பதை அறிந்த அந்தக் குருவி, அருகில் இருக்கும் கற்களை தூக்கிப் போட்டு, வாட்டர் பாட்டிலில் தண்ணீரை மேலே வரவைத்து அழகாக தண்ணீரை குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பிஸிக்ஸ் தெரிந்த குருவி என கமெண்ட் அடித்துள்ளனர்.
மேலும் படிக்க | உலக பேரரசாக மாறுமா ரஷ்யா? பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR