மனைவிகளை அடிக்க கணவர்களுக்கு அறிவுரை கூறிய பெண் அமைச்சருக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசிய பெண் அமைச்சரின் அதிர்ச்சியூட்டும் கருத்து வெளியானதில் இருந்து பெண் அமைச்சர் ஒருவரே பெண்களுக்கு எதிராக பேசுவது கேவலமானது என்றும், அமைச்சர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.



பிடிவாதம் பிடிக்கும் மனைவிகளை அடிக்க வேண்டும் என்று மலேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர்  சித்தி ஜைலா முகமட் யூசப் கருத்து தெரிவித்திருந்தார். 


அடங்காத மனைவிகளை கணவர்கள் அடித்து அவர்களை சரிப்படுத்த வேண்டும் என்று மலேசிய பெண் அமைச்சர் நம்புகிறார் சொல்லும் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.



தனது இந்த கருத்துக்காக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களைப் பெற்றுவரும் அமைச்சர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பலத்த விமர்சனன்க்களையும் பெறுகிறார். பெண்களை இழிவுபடுத்துவதாக கூறும் நெட்டிசன்கள், பெண்ணே பெண்குலத்துக்கு எதிரி என்றும் கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


ஏன் இப்படி அபத்தமான அறிவுரை கூறினார்?
Siti Zailah Mohd Yusoff மலேசியாவில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துறையின் இணையமைச்சராக உள்ளார். இவரின் வீடியோ (Viral Video) ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு 'Mother's Tip 4 என்று பெயரிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | விமான நிலையத்தில் விஜய்யின் ஹலமிதி ஹபிபோ பாடலுக்கு நடனமாடும் சமந்தா


அந்த வீடியோவில் அமைச்சர் சொல்லும் அறிவுரை அபத்தமானது என்று பலரும் விமர்சிக்கின்றனர். முதலில், கணவன் சொல்வதை கேட்கவில்லை என்றால், முதல் 3 நாட்களுக்கு மனைவியிடம் இருந்து விலகி தனியாக தூங்க வேண்டும். அப்போதும் மனைவி சரியாகாவிட்டால் அடிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்..


கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க மனைவிகளுக்கு அறிவுரை
அந்த வீடியோவில், கணவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு மனைவிகளுக்கு சித்தி ஜெயிலா அறிவுறுத்துகிறார். பெண்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் கணவரிடம் பேச வேண்டும் என்பார்கள். கணவர்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கும்போது அல்லது நல்ல மனநிலையில் இருக்கும்போது மட்டுமே மனைவிகள் பேச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவர் மகிழ்ச்சியாக இருப்பார் மற்றும் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் சொல்கிறார்.


மலேசிய பெண் அமைச்சரின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பெண்ணாக இருந்துவிட்டு இப்படியொரு கருத்தை வெளியிடுவது வெட்கக்கேடானது என சமூக வலைதளங்களில் கூறுகின்றனர். அமைச்சரின் அறிக்கை குறித்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.


மேலும் படிக்க | துணிக்கடையில் துணிகரம்: டிரையல் ரூமில் மறைந்திருந்தது யார்? வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR