துணிக்கடையில் துணிகரம்: டிரையல் ரூமில் மறைந்திருந்தது யார்? வைரல் வீடியோ

Viral Video: டிரையல் ரூமில் கேமரா இருக்கும் பல நிகழ்வுகள் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், இந்த டிரையல் ரூமில் என்ன இருந்தது? பீதியைக் கிளப்பும் மலைப்பாம்பு இருந்தது!! 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2022, 06:30 PM IST
துணிக்கடையில் துணிகரம்: டிரையல் ரூமில் மறைந்திருந்தது யார்? வைரல் வீடியோ title=

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

டிரையல் ரூமில் கேமரா இருக்கும் பல நிகழ்வுகள் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், இந்த டிரையல் ரூமில் என்ன இருந்தது? பீதியைக் கிளப்பும் மலைப்பாம்பு இருந்தது!! ஆம், என்ன நடந்தது என காணலாம்.  

ராட்சத மலைப்பாம்பு அனைவருக்கும் பீதியை உண்டாக்கும் ஒரு பாம்பினமாகும். அதன் பிடியில் யாராவது வந்தால், அவரது உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. 

ஒரு ராட்சத மலைப்பாம்பு பற்றிய ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு கடையில் நடக்கும் வேடிக்கையான விஷயத்தை காண முடிகின்றது. இதில் ஒரு மலைப்பாம்பு துணிக்கடையின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. 

ஒரு துணிக்கடையின் டிரையல் அறையில் ஒரு மலைப்பாம்பு ஒளிந்துகொண்டிருக்கின்றது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது பதிவில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

உள்ளே மறைந்திருக்கும் மலைப்பாம்பு

வீடியோவின் தொடக்கத்தில், துணிக்கடையின் டிரையல் ரூமின் ஃபால்ஸ் சீலிங்கில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியே எடுக்க, பாம்பு பிடிக்கும் நபர் அப்பகுதியை தட்டி உடைப்பதைக் காண முடிகின்றது. உள்ளெ பாம்பு இருப்பது தெரிகின்றது. அருகில் துணிக்குவியலையும் காண முடிகின்றது. 

கடையில் ஒளிந்திருக்கும் பாம்பு மிகவும் பெரியதாக உள்ளது. பாம்பு பிடிக்கும் நபர் பாம்பை வெளியே எடுக்க முயற்சிக்கும்போது, முழு சீலிங்கும் உடைந்து விடுகிறது. 

மேலும் படிக்க | மைதானத்தில் புழுதியைக் கிளப்பி, இணையத்தில் பட்டையைக் கிளப்பிய சண்டை: வைரல் வீடியோ 

அதிர்ச்சி அளிக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 Seems it was trying some new outfits in the trial room of this cloth store…

தாக்குதல் செய்த மலைப்பாம்பு

பாம்பு பிடிக்கும் நபர், பாம்பை பிடிக்க முயற்சிக்கையில், பாம்புக்கு கோவம் வருகிறது. அந்த நபர் பாம்பின் வாலை பிடித்துக்கொண்டார். ஆனால், பாம்பின் வீரியத்தின் முன்னால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பாம்பு பல முறை அவர் மீது தாக்குதல் செய்கிறது. அவர் அதை திசை திருப்ப முயற்சிக்கிறார். ஆனால், அவர் மீண்டும் பாம்பின் வாலை பிடித்துக்கொள்கிறார். 

கடுமையான முயற்சிக்குப் பிறகு, அந்த நபர் பாம்பின் வாய் மீது கால் வைத்து அதை விரைவாக பிடித்து தன் பிடிக்குள் கொண்டு வருகிறார். ஆனால், அந்த நபர் பாம்பை பிடித்த முறையைப் பற்றியும் பல விமர்சனங்கள் எழுகின்றன. 

சில பயனர்களுக்கு இது இரக்கமற்ற முறையாகத் தெரிகிறது. இப்படி இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | இதுதான் உண்மையான கேட்வாக்! பூனையின் குறும்பு தனம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News