வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இதில் வரும் செய்திகளும் வீடியோக்களும் நம்மை நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்கவும் வைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 


ஒரு திருமணத்தில் அதிக மகிழ்ச்சி அடைவது யார்? சந்தேகத்திற்கு இடமில்லாமல் மணமகளும் மணமகனும்தான். இவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பல விதங்களில் வெளிப்படுத்துகிறார்கள். சில சமயம் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இவர்கள் ஆடும் நடனங்கள் அனைவரது கனவனத்தையும் ஈர்த்து அந்த திருமணத்தை யாரும் மறக்க முடியாத திருமணமாக மாற்றி விடுகின்றன. இவற்றின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டால், அவை வைரல் ஆவது நிச்சயம். 


சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் கண்டிப்பாக நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. அனைத்து வித கட்டுப்பாடுகளையும் இழந்து தன் நிலை மறந்த நிலையில் மணமகன் அட்டகாசமாக ஆடும் வீடியோதான் இது. இதை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இதன் மூலம், தனது திருமணத்தால் மாப்பிள்ளைக்கு கிடைத்த மகிழ்ச்சியை தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகின்றது.


அட்டகாசமாய் டான்ஸ் ஆடிய மணமகன்


இந்த சமீபத்திய வைரல் வீடியோவில், மணமகன் தனது அசாதாரண நடன அசைவுகளால் திருமண சடங்கின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மணமகனும் அவரது குடும்பத்தினரும் கூடி, திருமணச் சடங்குகளைச் செய்யத் தயாராகி வருவதை வீடியோவில் காண முடிகின்றது. மேளம் கொட்ட ஆரம்பித்தவுடன், யாரும் எதிர்பாராத வண்ணம் மணமகன் வேடிக்கையான மற்றும் வினோதமான நடன அசைவுகளுடன் டான்ஸ் ஆடத் தொடங்குகிறார். இது அனைவரையும் வியப்படையச் செய்தது. 


அவரது ஆர்வமும் ஆற்றலும் அசைக்கமுடியாதவையாக இருந்தன. மேலும் அவரது நடன அசைவுகள் மேள தாளத்துடன் நன்றாக ஒத்துப்போனது. திருமணங்கள் வெறும் சம்பிரதாயங்களுக்கான நிகழ்வுகள் மட்டுமல்ல. இவை மகிழ்ச்சியான, நகைச்சுவையான மற்றும் எதிர்பாராத தருணங்களையும் உள்ளடக்கியவை என்பதை இந்த வீடியோ நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. 


மேலும் படிக்க | நாய்களிடம் குரங்கு செய்யும் அட்ராசிட்டி: குலுங்கி குலுங்கி சிரிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


மாப்பிள்ளையின் மாஸ் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்


வீடியோ இணையத்தில் வைரல் ஆனது 


இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் உடனடியாக பரவியதால் உடனடியாக வைரல் ஆனது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான யூட்யூபில் SmileKing024 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ