குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்

தாயில்லாமல் தவித்த குரங்கு குட்டி ஒன்றை பூனை ஒன்று தத்தெடுத்து அழைத்துச் செல்லும் கியூட் வீடியோ இணைய தளங்களில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 14, 2023, 11:22 PM IST
குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல் title=

இந்த உலகத்தை இணைப்பது எது என்று யாரிடமாவது கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள், இணையம் என்று. ஆனால், அன்பு உலகை இணைக்கும் புள்ளி என்று சொன்னால் நிச்சயமாக மறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இணையம் இல்லாத இடத்தில் கூட உயிரினங்கள் இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான அன்பை பரிமாறிக் கொள்வதில் இருக்கும் சுகமே தனி. அதனை உணரும்போது உங்களுக்குள் இருக்கும் பரவசத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அப்படியான பரவசத்தை உணர வைக்கும் வகையிலான வீடியோக்கள் இப்போது இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை பார்த்தால் நீங்கள் எதை தேடுகிறீர்கள் எதனை தொலைத்தீர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

பணத்தை நோக்கி ஓடும் பலரும் அன்பு, பாசம், பரிவு என எல்லாத்தையும் இழந்து நிற்கும்போது, அவர்களுக்கு அன்பு தேவையாக இருக்கும். அப்போது யாரேனும் ஒருவர் சொல்லும் சிறிய ஆறுதல் வார்த்தைக் கூட விலை மதிப்பு மிக்கதாக இருக்கும். அந்த விலை மதிப்பு மிக்க அன்பை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஏனென்றால், சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் புதுவிதமான ஆயிரக்கணகான வீடியோக்கள் வைரலாக வருகின்றன. ஆனால் எல்லா வீடியோக்களும் இந்த வீடியோவைபோல் நிச்சயம் இருக்காது. ஏனென்றால் தாயில்லாம் தத்தளித்துக் கொண்டிருந்த குரங்கு குட்டிக்கு பூனை ஒன்று அடைக்கலம் கொடுத்திருக்கிறது. நீங்கள் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.

ஆனால் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கை பிறக்கும்.  அந்த வீடியோவில், தாயை இழந்த குட்டி குரங்கு ஒன்றை தன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டு நடுரோட்டில் பூனை ஒன்று வேகமாக நடந்து செல்கின்றது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர குரங்கு குட்டியை தத்தெடுத்த பூனை என்று குறிப்பிட்ட பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது தாய்மை உணர்வு மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உள்ளது என தெரிகிறது.

மேலும் படிக்க | Viral Video: நீ நடந்தால் நடை அழகு... தத்தி தத்தி நடைபயிலும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News